பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

了g திருவருட்யா

(அ- சொ.) விடை - இரடபம். மறை - வேதம். தார் மாலை. படை - ஆயுதம். நாடு . சிவலோகம். பதம் திருவடி. நல்குக - தந்தருள்க.

(இ .கு.) பரவையின்பால், பால் ஏழன் உருபு. பாதம் என்பது பதம் எனக் குதுவது குறுக்கல் விகாரம். நல்குக வியங்கோள் வினைமுற்று, ஏகாரம் ஈற்றசை,

(வி - ரை.) வேதாந்தத்தின் உச்சியே ஈங்கு மறை மேல்' எனப்பட்டது. அதாவது உபநிடதம் கொன்றை இறைவனுக்கு அடையாள மாலை.

சுந்தரர் பரவை நாச்சியாரை மணந்திருந்தும், திரு வொற்றியூரில் இருந்த சங்கிலி நாச்சியாரையும் மணந்து கொண்டனர். இதனை அறிந்த பரவை நாச்சியார், சுந்தரரைத் தம் மாளிகையில் ஏற்க மறுத்துவிட்டனர். இதல்ை மனம் உடைந்த சுந்தரர், திருவாரூர்த் தியாகேசனிடம் முறையிட இறைவர், சுந்தரர்பொருட்டு இருமுறை பரவை நாச்சியார் மாளிகைக்குச் சென்று அவ்வம்மையார் சுந்தரரிடம் கொண்ட பிணக்கை நீக்கிச் சுந்தரரை வரவேற்க ஏற்பாடுகளைச் செய் தார். இந்த வரலாறே பெண் பரவையின்பால் நடையுடை யாய்' என்னும் தொடரில் அமைந்துள்ளது. இவ்வர லாற்றின் விரிவைப் பெரிய புராணத்தில் காண்க. 'இவ்வாறு பிணக்கம் கொண்டவர்களே இணக்கம் செய்து வைக்கின்ற நீ என்னேயும் உன்னுேடு இணக்கம் செய்துகொள்ளக் கூடாதா?’ என்பதே நம் ஐயாவின் முறையீடு. (3)

கீள் உடை யாய்பிறைக் கீற்றுடை யாய்எம் கிளேத்தலைமேல்

தகள் உடை யாய்செஞ் சடைஉடை யாய்ள்ன் தனஉடையாய் வாள் உடை யாய்மலை மான் உடை யாய்கலே மான்உடையாய் ஆள் உடை யாய்மன்றுள் ஆட்டுடை யாய்என்னை ஆண்டருளே.