பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 18

(பொ. ரை.) கீழ் உடை அணிந்தவனே! பிறைச் சந்திரனைச் சடையில் குடியவனே! எங்கள் உறவினர் களாகிய அப்பர் சுந்தரர் ஆகிய இருவர்களின் சென்னி மீது திருவடிகளைச் சூட்டியவனே! செந்நிற முடியினை யுடைய வனே! என்னை அடிமையாகக் கொண்டவனே! ஞானவாளக் கையில் கொண்டவனே! மலையரசன் பெற்ற மான்போலும் கண்களையுடைய பார்வதியை மனைவியாக உடையவனே! கலைமானேக் கையில் பிடித்தவனே ! என்னை அடிமை ஆளாகக் கொண்டவனே ! நடன சபையில் நடனம் செய்ய வனே! என்னை ஆட்கொண்டருள்வாயாக." (எ . து.)

(அ - ச்ொ.) iேள் உடை - கெளபீனம். கிளே - உறவு. மலைமான் - பார்வதி, கலைமான் - கொம்புகளையுடைய மான், மன்று - நடன சபை, ஆட்டு - நடனம்.

(இ . கு.) மலைமான் என்பதில் உள்ள மான் உவமை ஆகுபெயர்.

(வி. ரை.) அப்பர் பெருமான் தம் முடிமீது சிவபெருமான் திருமுடியைச் சூட்டவேண்டும் என்று திருச்சத்தி முற்றம் என்ற தலத்தில் வேண்டிக் கொண்டார். அந்த வேண்டு கோளைத் திருநல்லூர்த் தலத்தில் இறைவர் நிறைவேற்றிஞர்.

சுந்தரர் திருவதிகைக்குச் சென்றபோது, சித்தவடம் என்னும் மடத்தில் இரவு படுத்துக்கொண்டிருந்தார். சிவ பெருமானும் அங்கு வந்து படுத்துக் கொண்டு, சுந்தரர் தலையில் தம் பாதம் படும் வகையில் தம் கால நீட்டிப் படுத்து உறங்குவார் போலப் படுத்துக்கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிகளே ' எங்கிளேத் தலைமேல் தாளுடையாய் , என்னும் வரியில் அடங்கியுளது. மேலே கூறிய வரலாறு களைப் பெரிய புராணத்தில் விளக்கமாக அறியவும்.