பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 1 5.

வும் இயலாது. ஆகவே, நான் காட்டில் பரப்பப்பட்ட வலையில் அக்ப்பட்ட மானைப் போலக் கலங்குகின்றேன். தி: ஏன் இப்படித் துயர் உறுகின்ருய்' என்று நீ கேட்டு என்னிடம் இரக்கம் காட்டவில்லை என்ருல், நான் என்ன செய்ய முடியும்?” (எ-து.)

(அ - செ.) பாடு - துயரம். நவிலும் கூறும். கான் - காடு. கண்ணி - வலை.

(இ - கு.) ஒகாரங்கள் எதிர்மறைப் பொருளில் வந்துள்ளன.

(வி - ரை.) பஞ்சு,காற்று எந்தத் திசை நோக்கி வீசு கிறதோ, அந்தத் திசை எல்லாம் சென்றுகொண்டிருக்கும். அதுகுறித்தே உலகர் பஞ்சுபட்டபாடு’ என்று, ஒருவர் படும் பலவித துயரைப்பற்றிக் கூறுவர். இதை தினேவூட்டும் முறை. யில்தான் பஞ்சுதான் படுமோ என்னும் வி ைஈண்டு எழுந்துளது. (10)

பொய்யோ அடிமை உரைத்தல்எத் தாய்என் உள் போந்திருந்தாய் ஐயோதீன் உள்ளத் தறித்ததன் ருேஎன் அவலம்எல்லாம் கையோட வல்லவர் ஒiபதின் ஆயிரம் கற்பம்bன்று மெய்யோ டெழுதினும் தான்அடங் காது வியப்புடைத்தே

(பொ.ரை.) என் தந்தையே!” ஐயோ, அடிமையாகிய தான் துயரத்தால் வருந்துகின்றேன் என்று உன்னிடம் முறை. யிட்டுக் கொள்வது பொய்யா? நீ என் உள்ளத்தில் வந்து பொருந்தி இருக்கிருய் அல்லையோ? ஆகவே, என் துன்பத்தை உன் உள்ளம் அறிந்ததுதானே? எனக்கு இருக்கிற துன்பங், கள் எல்லாம் கையில்ை விரைவாக எழுதக் கூடியவர்கள் பத்தாயிரம் பேர்களும் ஒர் ஊழிக்காலம் வரையில் ஒரே