பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-16 திருவருட்பா

மூச்சாக இருந்துகொண்டு உண்மையாக எழுதினுலும் எழுத்தில் அடங்காத வியப்பைத் தருவன ஆகும்." (எ-து.)

(அ - சொ.) போந்து - வந்து. அவலம் - துயரம். கற்பம் . ஒர் ஊழிக்காலம்.

(இ . கு.) ஏகாரம் ஈற்றசை.

(வி - ரை.) கற்பம் என்பது பல்லாயிரம் ஆண்டுகள் கொண்ட ஒரு காலம்; பதினுயிரம் கற்பம் என்பது உயர்வு நவிற்சியாகும். துன்பத்தின் மிகுதியை உணர்த்தவே பல்லாயிர கற்பம் கூறப்பட்டன. (11)

தேன்சொல்லும் வாய்உமை பங்காதின் தன்னைத் தெரிந்தெடுத்தோர் தான்சொல்லும் குற்றம் குணம்ஆகக் கொள்ளும் தயாளுஏன்றே நான்சொல்வ தென்னபொன் நான்சொல்லும் வானிதன்

(நாண்சொல்லும்.அஷ் வான்சொல்லும் எம்மலை மான்சொல்லும் கைம்மலை மான்சொல்லுமே.

(பொ. ரை.) தேன்போலும் இனிமையான மொழிகளைப் பேசும் பார்வதி தேவியை இடப்பக்கத்தே கொண்டு விளங் கும் இறைவா! உன் பெருமையினே உணர்ந்து, உன்னையே முழுமுதற் கடவுள் என்று கொண்டவர்கள் சொல்லும் குற்றங் களைக் குணமாகக் கொள்ளும் கருணை வடிவினன் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை. உனது கருணையின் பெருக்கை, இலக்குமியின் கழுத்திலும், சரசுவதியின் கழுத்தி, லும், தேவமாதர்களின் கழுத்திலும் உள்ள மங்கள நாணுகிய தாலிக்கயிறுகள் சொல்லிவிடுமே. எங்கள் மலேமாளுகிய பார்வதி தேவியும் சொல்லுவாளே. இந்திரனது வெள்ளே யானையும் சொல்லுமே (எ . து.