பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 17

(அ.சொ.) உமை - புணர்வதி. பாகா - இடப் பாகத் தைத் தந்த இறைவனே. பொன் - இலக்கும். நாண்" தாலிக்கயிறு. வாணி - சரசுவதி. வான் - தேவலோகத்தில் உள்ள மாதர்கள். கைம்மலை மான் - வெள்ளேயான.

(இ - கு.) தயாளு-முற்றியலுகரம். வான்-இடஆகு பெயர். கைம்மலை மான் என்பதில் உள்ள ன் சாரியை, ஏகாரம் ஈற்றசை,

(வி - ரை.) பிருங்கி மகரிஷி இறைவனை மட்டும் சுற்றி வணங்கி வந்தனர். இறைவியைச் சுற்றிவந்து வணங்குவ தில்லை இதல்ை பார்வதி தேவியார் திருக்கேதாரம் சென்று இருபத்தோர் நாள் நோன்பு இருந்து இறைவரது இடப்பக் கத்தில் தான் இருப்பதற்கு வரம் வேண்டிப் பெற்ருள். இதல்ைதான் இறைவர் உமைபாகர் ஆயினர். பார்வதி மேற்கொண்ட நோன்பே இதுபோது கேதார கெளரி நோன்பு என்று கூறப்படுகிறது.

தேவர்கள் அமுதம் வேண்டித் திருப்பால் கடலைக் கடையச் சென்றனர். அங்ங்ணம் சென்றபோது, சிவபெருமா னின் திருவருளை வேண்டாது சென்றனர். அப்படிச் சென்றது குற்றம் தானே! அந்தக் குற்றத்தால் திருப்பாற் கடலில் விடம் தோன்றியது. அதைக்கண்டு தேவர்கள் ஓடினர். அந்த நிலையில் சிவபெருமான் தேவர்கள் தம்மைப் பணிந்து திரு வருள் பெருது சென்றது . குற்றம் என்று தெரிந்தும், அக் குற்றத்தையும் குணமாகக் கொண்டு விடத்தைத் தாம் உண்டு தேவர்கள் விடத்தால் இறவாதபடி திருவருள் டிரிந்தனர். விஷ்ணு, பிரம்மா முதலான தேவர்கள் இறந் திருந்தால் இலக்குமி, சரசுவதி முதலான தேவ மாதர்கள் தாலியை அறுத்திருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டிருக்கும். இறைவரது தயாளக் குணத்தால் விடத்தை உண்டதளுல்

தி-2