பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 1 9

செம்படவன் மகளாய்த் தோன்றி மணப்பருவம் உற்றபோது உன்னே வந்து மணந்து கொள்வோம்" என்று கூறினன். கூறிய வண்ணமே இறைவன் வலருனுய்ச் சென்று. உமையை மணந்தான். இந்த வரலாற்றை மேலும் விரிவாக அறிய அவாவுவோர் திருவிகளயாடற் புராணத்தில் வலை வீசின படலத்தில் காணலாம். இந்த வரலாற்றுக் குறிப்பே, "மலமான் சொல்லும்' என்னும் தொடரில் அமைந்துளது.

துருவாச முனிவர் சிவபெருமான மலரால் வழிபட்டு அம் மலரில் ஒன்றைக் கையில் கொண்டு புறப்பட்டனர். அவர் புறப்பட்டு வருகையில், இந்திரன் வெள்ளேயாகனயின் மீது வந்துகொண்டுருந்தான். அவனைக் கண்டதும் அவ னிடம் இறைவனைப் பூசை செய்து கொணர்ந்த மலரை அவன் கையில் கொடுத்தார். இந்திரன் அதனைத் தன் தலையில் சூடிக் கொள்ளாமல் வெள்ளே யானையின் தலையில் வைத்தான். அவ்யானை அம்மலரைத் துதிக்கையால் எடுத் துக் கால்கீழ் இட்டு மிதித்தது. அதனேக்கண்ட துருவாச முனிவர் வெள்ளே யானையைக் காட்டா8னயாக உழலும்படி சபித்துவிட்டார். அச் சாபத்தைப் பெற்ற வெள்ளே யானை காட்டானையாக மாறிப் பலவாறு உழன்று கடைசியில் மதுரையை அடைந்தது. மதுரைப் பொற்ருமரைக் குளத்தில் மூழ்கிச் சொக்கலிங்கப் பெருமானப் பூசித்தது.பின் இறைவர் யானையின் சாபத்தை நீக்கித் திருவருள் புரிந்தார். இந்த வரலாற்றை மேலும் விளக்கமாகக் காண விரும்புபவர் திருவிளையாடற் புராணத்துள் வெள்ளையான சாபம் தீர்த்த படலத்தில் காணவும். இந்த திகழ்ச்சியே கைம்மலைமான் சொல்லும்" என்னும் தொடரில் அமைத்துளது.

இவனம் எல்லாம், தயவு காட்டிய இறைவர் தமக்கும் தயவு செய்வார் என்னும் கருத்தில் வள்ளலார் வேண்டினச் என்க, (12)