பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝4 திருவருட்பா

(இ . கு.) என, என்ன என்பதன் தொகுத்தல் விகாரம். தன், போலும் என்பன அசைச் சொற்கள்.

(வி. - ரை.) இறைவன் திருமேனியைச் சுந்தரர், பொன் ர்ை மேனியன்' என்று கூறியதை நினைவு கூர்க, பிறவிதோறும் தாய் தந்தையர் உளர் ஆதலின், தாய் தந்தையர் ஆயிரம்பேர்" எனப்பட்டது.

'அன்னை எத்தனை எத்தனை அன்னையோ

அப்பன் எத்தனை எத்தனை அப்பனே முன்னை எத்தனை எத்தனை சென்மமோ'

எனும் பட்டினத்தார் கூறியதை ஈண்டு நினைவு கொள்க.

உலகத் தாய் தந்தையர் இறந்தபோது தீமூட்டிச் செல்வர், இதுதான் உண்மை என்பதைத் திருநாவுக்கரசரும்,

எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்

எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்

செத்தால்வந் துதவுவார் ஒருவர் இல்லை

சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்'

என்று அறிவுறுத்தினர். இறைவன் ஒருவன்தான் உண்மைத் தந்தை தாய் ஆவான். ஆபத்துக் காலத்திலும், அன்பு காட்டுபவன். சண்டேசுரருக்கு இறைவர் தம்மை தந்தை என்று கூறியதையும், செட்டியார் மரபைச் சார்ந்த ஒரு பெண் கரு உயிர்க்கும் நிலையில் இறைவர் தாயாக வந்து துணை புரிந்ததையும் இங்கு நம் நினைவிற்குக் கொண்டு வரலாம். இவற்றை உட்கொண்டே நம் ஐயா, தாய் தந்தை ஆயிரம்பேர் இருந்தாலும், அந்தோ நின்போலும் அன்புடையார் எனக்கு ஆர்' என்று கூறுவாராயினர். (17)