பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 25

அன்பால்என் தன்னஇங்காள்உடையாய்இவ் அடியவனேன் நீன்பால்என் துன்பம் நெறிப்பால் அகற்றென்று நின்றதல்லால் துன்பால் இடரைப் பிறர்பால் அடுத்தொன்று சொன்னதுண்டேக என்பால் இரங்கில் என்பால் கடல்பிள்ளைக் கீந்தவனே !

(பொ. ரை.) பால் வேண்டி அழுத புலிக்கால் முனி வரின் பிள்ளேயாகிய உபமன்யுக்குத் திருப்பாற்கடலையே பருகத் தந்த கருணுமூர்த்தியே! அன்பினுல் என்னை அடிமை கொண்ட தலைவனே! அடிமையாகிய நான் நின்னிடம் வந்து, நான் சென்றுகொண்டிருக்கும் தீய நெறியிலிருந்து விலக்கு என்று கேட்டது அல்லாமல், என் துன்பத்தைப் பிறர் எவரிடத்தேனும் சென்று முறையிட்டதுண்டோ ? அப்படி இருக்க என்னிடம் ஏன் உனக்கு இரக்கம் தோன்ற வில்லை.” (எ . து.)

(அ - சொ.) நெறி - வழி.

(இ - கு.) நின்பால், என்பால், என்பவற்றுள்ள பால், ஏழன் உருபு. துன்பு-ஆல், அன்பு + ஆல் எனப் பிரித்து ஆல் என்பதை மூன்ரும் வேற்றுமை உருபாகக் கொள்க.

(வி - ரை.) உபமன்யு, வியாக்கிரபாத முனிவரின் திருக் குமாரர். இவர் இளமையில் பால் வேண்டி அழுதபோது, சிவபெருமான் திருமால் பள்ளிகொள்ளும் திருப்பாற் கட8லயே பருகத் தந்தனர். இந்த உண்மையினை ஒன்பதாம் திருமுறை: யில் வரும் திருப்பல்லாண்டு, "பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்' என்று போற்றிப் புகழ்கிறது.

கைலைமலை வெண்ணிறமாக இருப்பதற்குரிய காரணம் இன்ன என்பதைக் கூறவந்த சிவப்பிரகாசர், உயமன்யு பாற்: கட்லை உண்டதை நினைவில்கொண்டு, உபமன்யு போவ