பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龙谷 கிருவகுட்பா

வேறு எத்தக் குழந்தை அழுதாலும் சிவபெருமாள் தம்மைக் கொடுத்துவிடுவார். அப்போது தம்மீது பள்ளிகொள்ளும் திருமாலும் மறுத்துக் கூறமாட்டார். ஆகவே, சிவபெருமா ணுக்கே இருப்பிடமாக இருந்துவிட்டால், சிவபெருமான் நம்மை எவர்க்கும் கொடுக்கமாட்டார் என்று கருதித் திருப்பாற் கடலே வெள்ளி மலையாக வந்துளது என்று கூறி புள்ளார். இவ்வாறு அவர் கூறிய பாடல் பிரபுலிங்கலிலையில், 'கண்பிசைந் தொருசேய் இன்னும் கலுழினும் தனக்

கொடுப்பன் மண்பிசைந் துண்ட மாயன் மறுத்திட வலியன் அல்லன் நண்பிசைந் திறைவ னுக்கே நாம்இடம் ஆவம் என்று பண்பிசைந் தலதி ரண்ட பரிசில்தின் றிடும்.அக் குன்று'

என்று காணப்படுகிறது.

கிருட்டினன் சிவபூசை செய்ய உபமன்யு முனிவரிடமே திருவடி தீட்சை பெற்றுளன். இந்த உண்மையினைச் சேக்கிழார்,

'யாத வன்துவ ரைக்கிறை ஆகிய

மாத வன்முடி மேல் அடி வைத்தவன் ' என்று குறிப்பிடுவதால் உணர்க. (18)

என்போல் மனிதரை ஏன் அடுப் பேன்.எனக் கெய்ப்பில்வைப்பம் பொன்போல் விளங்கும் புரிசடை யான்தனப் போய்அடுத்தேன் துன்போர் அணுவும் பொறேன்.இனி யான்என்று சொல்லிவத்தேன் முன்போல் பராமுகம் செய்யேல் அருளுக முக்கணனே.

(பொ. - ரை.) மூன்று கண்களையுடைய இன்றவனே! என்னைச் சிலர் ஏன் இவ்வாறு துயர் உறுகின்ருய்? உம்மைப் போன்ற தல்ல மனிதரை அடைந்து அவர்களிடம், உம் குறை