பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு &雷

கன்க் கூறி அக் குறைகளைப்போக்கிக்கொள்ளலாமே" என்று கூறினர். அப்போது நான், என்போன்ற மனிதரை அடைத்து என் குறைகளைப் போக்குமாறு ஏன் சொல்வேன். எனக்கு வறுமைக் காலத்தில் உதவக்கூடிய பெருஞ் செல்வம்போன்ற வனும், பொன்போல ஒளியுடன் விளங்கும் சுருண்ட சடை புடைய வனும் ஆன சிவபெருமான் இருக்க, அவனைப் போய்ச் சார்ந்தேன். இனித் துன்பத்தை ஓர் அணுவளவு அடைய மாட்டேன்' என்று இறுமாப்புடன் சொல்லிவிட்டு வந்தேன். ஆகவே, முன் என்னைப் பார்த்தும் பாராமல் இருந்தது போல் இனியும் அசட்டையாக இருக்கவேண்டா. எவ்வாறேனும் இறைவா! அருள் செய்வாயாக. (எ . ம்.)

(அ - சொ.) எய்ப்பு - வறுமை. வைப்பு - செல்வம். புரி சுருண்ட, பராமுகம் - அசட்டை.

(இ - கு.) கணன் என்பதில் ண எனும் மெய்யெழுத்து தொகுத்தல் விகாரத்தால் மறைந்தது, தன், அசைச் சொல்.

பொன்உடை யார்தமைப் போய் அடுப் பாய்என்ற புன்மையினுேர்க் என் உடை யான்தன யேஅடுப் பேன்.இதற் கென்அளவும் பின்இடையேன்.அவர் முன் அடையேன்எனப் பேசிவந்தேன் மின்இடை மாதுமை பாக:என் சோகம் விலக்குகவே.

(பொ , ரை.) மின்னல் தோன்றி மறைவது போலத் தோன்றி மறையும் அவ்வளவு நுணுகிய இடையினையுடைய பார்வதியின் மணுளனே! என்னை நோக்கிப் பொன்படைத்த செல்வர்களைச் சென்று அடைந்து உன்துயரம் போக்கிக் கொள்ளலாமே என்று கூறிய அற்பர்களிடம், என்னே அடிமை யாகக் கொண்ட இறைவனைத்தான் அடைவேன் ; இதில் எள்ளளவேனும் பின் வாங்கமாட்டேன். அந்தச் செல்வர் முன் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.