பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருவருட்பா

ஆகவே, என்சோர்வை நீக்கி அருள் செய்வாயாக’ (எ. •* து).

(அ - செ.) புன்மையிைேர் - அற்பர்.

(இ - கு.) தனயே என்பதில் உள்ள ஏகாரம் பிரிநிலை.

(வி . ரை.) மாதர்களின் இடை சிறுத்துக் கண்ணுக்குத் தோற்றம் அளிக்காது என்ற கருத்தில் புலவர்கள் பெண்க ளின் இடைக்கு மின்னலை உவமை கூறுவர். கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இல்லை ஆதலின், வள்ளலார் என்னுடையான் தனயே அடுப்பேன்" என்று உறுதியாகக் கூறினர். (20)

சாதகத் தோர்கட்குத் தான்.அருள் வேன்.எனில் தாழ்ந்திடுமா பாதகத் தோனுக்கு முன்அருள் சந்ததெப் பான்மை கொண்டோ தீதகத் தேன்எளி யேன் ஆ யினும் உன் திருவடியாம் போதகத் தேநினைக் கின்றேன் கருணை புரிந்தருளே.

(பொ - ரை.) இறைவா! நீ சரியை, கிரியை, யோகம், ஞானம் முதலான நால்வகை நெறிகளில் பயிற்சியுடைய நற்குணச் சீலர்கட்குத்தான் திருவருள் புரிவேன் என்ருல், மிகத் தாழ்ந்த மகா பாதகத்தைச் செய்தவனுக்கு எந்தத் தகுதியைக் கொண்டு முன் ஒரு சமயம் திருவருள் புரிந்து அவனைக் காத்தாய்? நான் தீங்கான குணத்தை உள்ளத் தில் கொண்டிருப்பவனுயினும், மிக எளியவனுயினும் உன் திருவடியாம் மலரை என் உள்ளத்தில் கொண்டிருக்கின் றேன். ஆகவே, எனக்குக் கட்டாயம் திருவருள் புரிய வேண்டும்." (எ - ம்.)

(அ . சொ.) சாதகம் - பயிற்சி. பான்மை . தகுதி. போது . மலர். அகம் - மனம்.