பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 29

(இ. கு.) மா . உரிச்சொல், சகாரம், வின, ஏ. ஈற்றசை.

(வி - ரை.) அவந்தி நாட்டுப் பிராமணர் ஒருவர்க்கு ஒரு மகன் பிறந்தான். அவன் வளர்ந்து மணப்பருவம் உற்ற னன். அவன் தாயையே காதலித்தான். அவன் எண்ணத் திற்கு அவளும் இணங்கினுள். இதன் காரணமாகத் தன் தந்தையையும் கொன்ருன். பிறகு தான் காதலித்த தாயை அழைத்துக்கொண்டு ஒரு பாலைவனத்தைக் கடக்கும்போது வேடர்கள் இவனத் தடுத்து, அவன் கையில் இருந்த பொருளைக் கவர்ந்து. அவன் தாயையும் கொண்டு சென்றனர். பின்னர் அலைந்து திரிந்து மதுரையை அடைந் தான். சிவனக் காணும் வாய்ப்பபைப் பெற்ருன். சிவபெரு மான் அவனுக்குச் சிவனடியாரை வழிபடுமாறு கூற, அவனும் அவ்வாறே சிவனையும் சிவனடியாரையும் போற்றித் தன் பாதகம் நீங்கப் பெற்றன். இதன் விரிவைத் திருவிளையாடற் புராணத்தில் மா பாதகம் தீர்த்த படலத்தில் காண்க. இநத வரலாறே 'மா பாதகத் தோனுக்கு முன் அருள் ஈந்தது* என்னும் தொடரில் அமைந்துள்ளது. "பொறுக்க முடியாத மாபாதகத்தைச் செய்தவனுக்கே அருள்புரிந்த நீ ஒரு பாதகமும் செய்யாத என க்கு அருள் செய்யக் கூடாதா ? ' என்பது வள்ளலார் வேண்டுகோள். (21)

அருள்அறி யாச்சிறு தேவரும் தம்மை அடுத்தவர்கட் இருள்அறியாவிளக் கென்ருலும் நெஞ்சம் இரங்குகின்ருர் மருள் அறி யாப்பெருந் தேவேந்ன் தன்அடி வந்தடைந்தேன் தெருள் அறி யாச்சிறியேன்.ஆயினும்செய்க சீர்அருளே.

(பொ. ;ை.) மயக்க உணர்வு சிறிதும் இல்லாத

பெருமைமிக்க இறைவரே! அருள் என்னும் பண்பு சிறிதும் இல்லாத சிறுதெய்வங்கள் கூடத் தம்மை யாரேனும் சரண்