பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திருவருட்யா

புகுந்தால், தாம் அஞ்ஞான இருளேப் போக்குதற்குரிய மெய்ஞ்ஞான ஒளியைப் பெருத வெறும் விளக்காக இருந் தாலும், அடைக்கலம் புகுந்தவர்களிடத்து, மனம் இளகி, இரக்கம் காட்டுவர். நீயோ அஞ்ஞானத்தை நீக்கும் மெய்ஞ்ஞான தீபம். ஆகவே, நான் உன் திருவடிகளைச் சரணம் புகுத்தேன். நான் தெளிவு இல்லாத அற்பன். அப்படி இருந்தாலும் நீ எனக்குச் சீரிய திருவருளைப் புரிந்து காப்பாயாக " (எ . து )

(அ - சொ.) மருள் - மயக்கம். தெருள் - தெளிவு.

(இ . கு.) செய்க, வியங்கோள் வினைமுற்று. ஏகாரம் ஈற்றசை.

(வி .ை) சிவபெருமான் தாருகா வனத்து இருடி பத்தினிமார் இடம் பிட்சைக்குச் சென்றபோது, அவர்கள் காம மயக்கத்தால் மயங்கிய நிலையிலும் அவர்கள் பால் இவர் காம மயக்கம் கொண்டிலர். இந்த உண்மையினைத் திருவிகள யாடற் புராணம்,

அஞ்சலிப் போது பெய்வார் சரணம்என் றடியில் வீழ்வார் தஞ் செனத் தளிர்க்கை நீடடித் தழுவிய கிடைக்கும் தோறும் எஞ்சுவான் எஞ்சா தேத்தி எதிர்மறை எட்டும் தோறும் வஞ்சனுய் அகல் வான் மையல் வஞ்சியர்க் கணியன் ஆமோ”

என்று கூறுகிறது. ஆகவேதான் நம் ஐயா "மருள் அறியாப் பெருந்தேவே' என் றர்.

இருள் ஈண்டு அஞ்ஞானமாகிய இருட்டு. இதை, நீக்கும் வன்மை சிறு தேவர்கட்குக் கிடையாது. தேவர்கள், தேவர் என்று பெயர் பெற்றிருந்தாலும், மகாதேவர்போல அருள்பசலிக்கும் தறத்தர் அல்லர்; இது குறித்தே, 'அருள் அறியாச் சிறுதேவா" என்றனர். விளக்கு ஒளியாய் இருப்