பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்பெருஞ்சோதி ! தனிப்பெருங்கருணை !!

பதிப்புரை

இறையருள் தூண்டுதலால் திரு அருட்பா முழுமைக்கும் 72 பகுதிகளில் விரிவுரை காண முயன்ருேம், அதன் பயனுக இதுவரையில் 8 விரிவுரை நூற்கள் வெளிவந்துள்ளன. இப்போது வருவது 9-ஆவது விரிவுரை நூல்.

இது திருவருள் முறையீடு எனும் பகுதி. இது மொத்தம் 232 கட்டளைக் கலித்துறையால் ஆயது. நூல் அளவு கருதி இதனை இரு பகுதிகளாக அச்சிடுகிருேம். இது முற் பகுதி.

இறைவனின் பெருமையையும், உயிர்களின் சிறுமையை யும் உணர்ந்து சிறுமை நீங்கி அழியாப் பெரு நலம் வேண்டு வது இதன் உள்ளுறை.

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும்பொன் ஞர்சடைப் புண்ணியன்' காத லாகிக்க சிந்துகண் ணிர்மல்கி

ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது ' 'கற்ருவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே’’ 'அழுதால் உன்னைப் பெறலாமே” என்பன ஆன்ருேர் அருள் மொழிகள்.

வள்ளலாரும் பிறிதோரிடத்தில், 'நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து

நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே

நிறைந்துநிறைந் நூற்றெழும்கண்

ணtர்அதல்ை உடம்பு