பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 缪制

பவன் இறைவன். அந்த விளக்கொளியாம் இறைவன் மெய்ஞ்ஞான தீபம் ஆவன். அந்த மெய்ஞ்ஞான தீபம்தான் அஞ்ஞான இருளை அறியவும், அகற்றவும் இயலும். தேவம் களும் விளக்கு என்று கூறுதற்குரியர் என்ருலும், மாலை என்னும் பெயரைப் பூமாலை பெற்றிருப்பது போல், மாலைக் காலமும் மாலை என்று பெயர் பெற்றிருந்தும் எப்படிப் பெருமை உருதோ, அப்படியே தேவர்களும் விளக்கெனும் பேரைப் பெற்றிருந்தும் சிறப்புடையார் என்பதாம். இதனுல் தான் இருள் அறியா விளக்கு' எனப்பட்டனர். {22}

அரும்பொரு வேஎன் அரசேஎன் ஆர்உயிர்க் காகவந்த பெரும்பொரு ளேஅருள் பேறே சிவானந்தம் பெற்றவர்.பால் வரும்பொருளே முக்கண் மாமணி யேநீன் வழிஅருளால் தரும்பொரு ளேபொருள் என்றுவந் தேன்.எனத் தாங்கிக்கொள்ளே

(பொ. ரை.) கிடைப்பதற்கு அருமையான பொருளே! என் அரசனே! என் அருமையான உயிரைக் காப்பாற்றுவதற் காகவே என்பால் வந்த பெரிய பொருளே! உன் திருவருள் துணைகொண்டு நான் பெற்ற பாக்கியமே சிவாநந்தப் பேற்றை அடைந்தவர்களிடத்தில் சென்று திருவருள் புரியும் அரும் பொருளே! மூன்று கண்களை யுடைய உயர்ந்த மாணிக்கமே! தின் திருவருளால் பெறும்பொருளே பொருள் என்று கருதி உன்னைச் சரண் அடைந்தேன். ஆகவே, என்னத் தாங்கிக் கொள்வாயாக" (எ . து.)

(அ .செ.) மா = உயர்ந்த,

(இ . கு.) பெற்றவர்பால், பால் ஈண்டு ஏழன் உருபு. ம்ா, உரிச்சொல். பொருளே, என்பதில் உள்ள ஏகாரம் பிரி திலைப் பொருளது.