பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருவருட்யா.

(வி. ரை.) சிவனை உள்ளத்தில் உன்னும்போது பெறும் ஆனந்தமே சிவாநந்தம். இதனை மணிமொழியார் சட்டோ தினக்க மனத்தமுதாம் சங்கரன்' என்றனர். மேலும், அவரே அந்தச் சிவாநந்தம் பெறும் வழியைக் கூறுகை யில் நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போ தும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடை யான்' என்றும கூறி அறிவித்துள்ளனர். (23)

சரங்கசர் முகம்தொடுத் தெய்வது போல்என் தனை உலகத் துரங்கார் இருள் பெரு வசதன யால்இடர் ஊட்டும்நெஞ்சக் குரங்கால் மெலிந்துநின் நாமம் துணை எனக் கூறுகின்றேன் இரங்கார் தமக்கும் இரங்குகின் ருேய்எற் கிரங்குகவே.

(பொ. - ரை.) 'உன்னை அடுத்து கெஞ்சிக் கேளாதவர் கட்கெல்லாம் இரக்கம் காட்டும் இறைவனே! வில்லில் அம்பை வைத்து எறிவதுபோல என்னைக் கரிய இருள் போன்ற உலகத்தில் வன்மை மிக்க துன்பத்தைக் கொடுக்கும் மனமாகிய குரங்கால் வாடி அவ்வாட்டத்திலிருந்து மீள உன் திருப் பெயரையே துணை எனக்கொண்டு சொல்லித் துதிக் கின்றேன். ஆகவே எனக்கும் இரக்கம் காட்டவேண்டும்: (57 -gl.)

(அ - சொ) சரம் - அம்பு. கார்முகம் - வில். எய்வது - விடுவது. உரம் - வன்மை. வாதனே - துன்பம், நாமம் . பெயர். எற்கு - எனக்கு, இரங்கார் . முறையிட்டுக் கொள் ளாதவர்.

(இ . கு.) கார் இருள் என்பதைக் கடுமை இருள் எனப் பிரித்தல் வேண்டும். இது பண்புத் தொகை.

(வி . ரை.) துன்பத்தின் வேதனைக்கு அம்பு உடலில் படுவது உவமைக் காட்டப்பட்டது. மனம் ஒரு வழிப்