பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 33

படாமல் அலைதலின், மனத்தைக் குரங்கு என்றனர், ! காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட்டு ஒட ' என்பர் தாயு மானவர். இருட்பெரு வாதனே பிராரர்த்தவின. இருன் துன்பம் செய்தலின், வாதனே இருள் பெருவாதனை எனப் பட்டது. (24)

கூறுற்ற குற்றமும் தானே மகிழ்வின் குணம்எனவே ஆறுற்ற செஞ்சடை அண்ணல்கொள் வான்என்பர் ஆங்கதற்கு வேறுற்ற தோர்கரி வேண்டுகொ லோஎன்.உள் மேவிஎன்றும்

iறுற்ற பாதத் தவன்மிடற் றேகசி மேவியுமே.

(பொ. ரை.) கங்கை ஆறு பொருந்திய சிவந்த சடை யுடைய பெருமையில் சிறந்த சிவபெருமான், பல்வேறு பகுதி யாகச் செய்யப்படும் குற்றங்களே எல்லாம் மகிழ்வுடன் மன்னித்து, அக் குற்றங்களைக் குணமாகக் கொள்பவன் என்று மெய்ஞ்ஞானிகள் கூறுவர். இந்த உண்மையை நிலைநாட்ட என் மனத்தில் பொருந்தி என்றும் பெருமையுடன் விளங்கும் திருவடிகளை யுடையவனது கழுத்தில் சாட்சி பொருத்தி இருந் தும், வேறு சாட்சியும் வேண்டுமோ?. வேண்டா அன்றே: (எ . து )

(அ - சொ.) கூறு - பகுதி. அண்ணல் - பெருமையில் சிறந்த சிவபெருமான். சுரி - சாட்சி, வீறு பெருமை. மிடறு - கழுத்து.

(இ . கு.) கொல், விணுப் பொருள்தரும் இடைச்சொல். ஒ, அசை.

(வி . ரை.) தேவர்கள் இறைவனைத் துணையாகக் கொள் ளது திருப்பால் கடலைக் கடைந்ததனுல் விடம் தோன்றியது. தேவர்கள் இறைவன் துணை வேண்டாதது குற்றம். இந்த நிலையில் இறைவன் அவர்களின் குற்றத்தைக் குண மெனக் கொண்டு, அந்தவிடத்தைத் தான் ஏற்றுத் தேவர்களைக்

3