பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவுருள் மூறையீடு ஆ இ

~ T. W. - - مصنعاء = ’ - சிவபெரு அன்ஆாக்கறி வேண்டும் என்று பைரவி" விந்த 婚 蠶 கூறிய் சொல்லுக்குச் சேக்கிழார், கபுண்செய் நோவில் வேல் எறிந்தால் போலும்" என்று கூறினர். ೧೩೯ಕ್ಷಿಸಿ' இராமனைத் தம்முடன் அனுப்புமாறு தயரதனக் கேட்ட போது தயரதன் உற்ற துயரத்திற்கும் கம்பர், மருமத்திள் எறிவேல் பாய்ந்த புண்ணிலம் பெரும்புழையில் கனல்

துழைந்தால் என' என்று பாடி யுள்ளனர். (26)

வாளேய் நெடுங்கண்ணி எம்பெரு மான வருடுமலர்த் தாளே வருந்த மணிக்கூடல் பாணன் தனக்கடிமை ஆளே எனவிற கேற்றுவிற் ருேய்நீன் அருள்கிடைக்கும் நாளேநல் நாள்.அந்த நாட்காயிரம் தெண்டன் நான்செய்வனே. (பொ. ரை.) வாள் போல் கூர்மையான நீண்ட கண் களையுடைய உமாதேவியார் தடவிக் கொடுக்கும் உன் மலர் போன்ற திருப்பாதங்கள் நோவும்படி அழகிய மதுரை வீதியில் பாணபத்திரனுக்கு நான் அடிமை ஆள் என்று சொல்லி விறகைத் தலைமேல் சுமந்து விற்ற கருண மூர்த்தியே ! உன் திருவருள் கிடைக்கும் நாள்தான் எனக்கு நல்ல நாள். அந்த நாள் எனக்கு அமையுமானல், அந்தநாளுக்கு நான் ஆயிரம் முறை வணக்கம் செய்வேன். (எ . து.)

(அ - சொ.) ஏய் - போன்ற, வருடும் - தடவும். மணி - அழகிய, கூடல் - மதுரை. தெண்டன் - வணக்கம்.

(இ.கு.) ஏய் உவம உருபு, தாளே என்பதன் ஏகாரம் அசை, ஆளே, என்பதன் ஏகாரம் பிரிநிலை. நாளே, என்றதன் ஏகாரம் தேற்றம்.

(வி . ரை.) உத்தம மாதர்கள் தம் கணவன்மார்களின் பாதத்தைத் தடவிக் கொடுப்பர். இவ்வாறு தேவ மா.தரும் செய்வர் என்பதை அஷ்ட பிரவத்த நூலும் திருமால் பாதத்தை தி தேவி, த்தேவி வருடியதை,