பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 39

கோடியில் நூற்றில் ஒரு பங்கும் அன்று. பணத்தைத் தேடிப்புதைத்து வைக்கின்றவர்களும் கூட எவரேனும் தம்மை வந்து கேட்டால் சிறிதளவேனும் பொருள் கொடுப்பர். ஐயோ நான் உன்சீரை நினைந்து பாடி நிற்கின் றேன். ஆகவே, என் வாட்டமான முகத்தைப் பார்த்தேனும் அருள் செய்வாயாக." (எ . து.)

(அ சொ.) நண்ணும் - நெருங்கும். (இ - கு.) புதைப்போரும் என்பதன் உம்மை இழிவு சிறப்பு. சிறிதும் அருள் செய்யாமல் இருப்பது அழகா என்பது வள்ளலார் கருதும் கருத்து. (29)

தயாகி னும் சற்று நேரம் தரிப்பள் தம் தந்தையைநாம் வாயார வாழ்த்தினும் வையினும் தன் இடை வந்திது நீ சயாய் எனில் அருள் வான் என் றுனை அடுத் தேன் உமையாள் நேயா மனம்இரங் காயாஎன் எண்ணம் நெறிப்படவே.

(யொ - ரை.) 'பார்வதி தேவியின் அன்பனே ! தாய் ஒவ்வொரு சமயம் ஏதேனும் கேட்கும்போது கொடுப்ப தற்குச் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்து, கொடுக்கலாமா கொடுக்கக்கூடாதா என்று இருப்பள். ஆகவே, நாம் நம் தந்தையை வா யாரப் புகழ்ந்தாலும், திட்டினுலும் அவரிடம் சென்று கொடு என்று கேட்டால் கொடுப்பார் என்று கருதி உனே அடுத்தேன். நான் நல்வழிப்பட என்னிடம் மன இரக்கம் காட்டமாட்டாயா ?” (எ . து.)

(அ - சொ.) நெறிப்பட - நல்வழியில் நடக்க. (80)

நடும்பாட்டை நாவலன் வாய்த்திருப் பாட்டை நயத்திட்டc குடும்பாட்டை மேற்கொண்ட என்தமிழ்ப் பாட்டையும் கொண்டென்

(உள்ளத் திடும்பாட்டை நீக்கிலை என்னினும் துன்பத் திழுக்குற்றுநான் படும்பாட்டை ஆயினும் பார்த்திரங் காய்எம் பரஞ்சுடரே.