பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 திருவருட்பா

(பொ. ரை.) மேலான அருட்பெருஞ் சோதியே: இறைவனே! அவ்வப்பொழுது பாடுகின்றவர்களுடைய பாட்டையும், சுந்தரருடைய வாயினின்று வெளிவந்த, திருப்பாட்டையும் விரும்பிய நீ, நான் குடும்ப ஆட்டத்தில் ஈடுபட்டுப் பாடிய என் தமிழ்ப்பாட்டையும் ஏற்றுக்கொண்டு என் உள்ளத்தின் துன்பத்தை நீ நீக்கவில்லை என்ருல், நான் துன்பத்தால் வலிக்கப்பட்டு படும் வருத்தத்தையாகிலும் பார்த்து இரக்கம் காட்டவேண்டும்." (எ . து.)

(அ சொ.) நடும்பாட்டு - அவ்வப்பொழுது இடை இடையே பாடும் பாட்டு. நாவலன்-திருநாவலூரில் தோன்றிய. சுந்தரர். பாட்டை - துயரை.

(இ . கு.) குடும்பு-ஆட்டை எனப் பிரிக்க (வி - ரை.) நடும் பாட்டு என்பது உலகர் அவ்வப்போது, பாடும் பாடல்கள். திருப்பாட்டு என்பது சுந்தரர் பாட்டுக்கே சிறப்பாக அமைந்த பெயர். திருநாவுக்கரசர் பாட்டுத்தான் தேவாரம். திருஞானசம்பந்தர் பாட்டுத் திருக்கடைக் காப்பு. சுந்தரர் பாட்டு, திருப்பாட்டு. இறைவர். சுந்தரரை, சொற்றமிழ் பாடுக என்று பணித்தமையினுல் கண்டு, 'திருப்பாட்டை நயந்திட்ட நீ என்றனர். குடும்பத். தில் வள்ளலார் உழந்திலர் என்ருலும், உலகோர் செயலைத், தம் மீது ஏற்றிக் கூறினர் எனக்கொள்க. (S1)

ஏட்டாலும் கேள்அயல் என்பாரை நான்சிரித் தென்னவெட்டிப் போட்டாலும் வேறிடம் கேளேன்என் ஆணப் புறம்விடுத்துக் கேட்டாலும் என்னே உடையான் இடம்சென்று கேட்பன்என்றே நீட்டாலும் வாய்உரைப் பாட்டாலும் சொல்லி நிறுத்துவனே. (பெர். ரை.) இறைவா! என்னிடம் சிலர், நீங்கள் ஏன் இவ்வாறு துயர் உறுகின்றீர்கள் ? நேரே அயலாரிடம் சென்று உதவி கேட்பதற்கு, நாணம் கொண்டாலும்,