பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

நனைந்துநனைத் தருள்அமுதே நல்நிதியே ஞான நடத்தரசே என்னுரிமை

நாயகனே என்று வனந்துவனந் தேத்துதும்நாம்

வம்மின் உல கியலிit!' என்று அழைக்கிரு.ர்.

இந் நூலை ஓதி உணர்வார்க்கு இறையருள் கிட்டும் என்பது எமது துணிபு.

இச் சிறந்த பகுதிக்கு விரிவுரை எழுதி உதவியவர் பேராசிரியர், வித்துவான், பாலூர். கண்ணப்ப முதலியார் M.A., B 0.ா., அவர்கள். (தமிழ்த்துறைத் தலைவர், புதுக் கல்லூரி, சென்னை) அவர்களுக்கு எம் உளம்கனிந்த நன்றி உரித்தாகுக. இவ் விரிவுரையின் சிறப்பை நூலுள் பரக்கக் காணலாம்.

எம் வேண்டுகோளுக்கிணங்கிப் பல வேலைகளுக் கிடையில் அணிந்துரை வழங்கிய சென்ன்ை உயர் நீதிமன்ற நீதிபதி, செந்நெறிச் செல்வர் இர. சதாசிவம், M.I., அவர்க ளுக்கும், நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மற்றும் இதை அழகுறக் குறித்த காலத்தில் அச்சிட்டு உதவிய ரத்னம் கிளை அச்சகத்தாருக்கும் எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளு கிருேம். - ஆன்ம நேயர்கள் எமது முன் 8 வெளியீடுகளை வாங்கி எங்களை ஊக்குவித்தது போலவே, இதையும் வாங்கி எங்களே ஊக்குவித்துப் பெருநலம் பெறுமாறு விழை கின்ருேம்.

வாழி வள்ளலார் திருவடிகள்.

ஊ. வ. தட்சணுமூர்த்தி, வேலுர், தலைவர்,

வடார்க்காடு மாவட்ட சமரச சுத்த 27–4–68 சன்மார்க்க சத்திய சங்கம், வேலூர்.

sصصمكسيكجمعيمضيع جسمحمضي