பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 41

அவர்க்கு ஒரு கடிதம் எழுதியாகிலும் கேட்கலாமே ' என்று கூறுவர். அப்போது நான் அவர்களை நோக்கிச் சிரித்து, என்ன வெட்டிப் போட்டாலும் கூட வேறு ஒருவரிடம் சென்று கேட்க மாட்டேன். இதனே என்மேல் ஆ8ண யிட்டுச் சொல்கின்றேன். நான் இருக்கும் இடத்தைக் கடந்து சென்று உதவியைக் கேட்பதாளுலும், என்ன அடிமை கொண்டுள்ள இறைவனிடம் சென்றுதான் கேட்பேன்’ என்பதை, கடித மூலமாகவும், வாய்ப் பேச்சின் மூலமாகவும், சொல்லி என் கொள்கையை நில நாட்டுவன்' (எ . து.)

(அ - சொ.) ஏடு, நீட்டு - கடிதம். புறம் . வெளி. (வி - ரை.) வள்ளலாரை அணுகித் தம் வறுமையைப் போக்கச் செல்வர் எவர்க்கேனும் ஒரு சீட்டுக்கவி எழுதிக் கொடுக்க வேண்டும் என்று சென்னைக் கந்தசாமி முதலியார் வேண்டியபோது நம் ஐயா இவ்வாறு பாடினர் என்றும் சிலர் கருதுவர். (32.

சீர்க்கின்ற கூடலில் பாணனுக் காட்படச் சென்றஅந்நாள் வேர்க்கின்ற வெம்மணல் என்தலை மேல்வைக்கும் மெல்அடிக்குப் பேர்க்கின்ற தோறும் உறுத்திய தோஎனப் பேசிஎண்ணிப் பார்க்கின்ற தோறும்என் கண்ணேஎன் உள்ளம் பதைக்கின்றதே.

(பொ. ரை.) என் கண்மணி போன்ற இறைவனே : சிறப்புப் பொருந்திய மதுரைமாநகரில் பாணபத்திரன் பொருட்டு விறகாளாய்ச் சென்ற அந்த நாளில் வியர்வை கொட்டுகின்ற வெயிலில் வெம்மையான மணலில் என்தலை மீது சூட்டுகின்ற மென்மை பொருந்திய திருவடிகளைப் பெயர்த்துப் பெயர்த்துத் தரையில் எடுத்து வைக்கும் தோறும் தைத்ததோ என்று பேசும்போதும், எண்ணிப் பார்க்கும் போதும் என் உள்ளம் பதைக்கின்றது. (எ . து.)

(அ - சொ.) கூடல் - மதுரை. பாணன் - பாணபத்திரர். உறுத்தியது - தைத்தது.