பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 திருவருட்பா

(இ . கு.) தோறும் என்பது ஒர் இடைச்சொல்.

(வி - சை.) பாணபத்திரருக்கு இறைவன் விற்களாகச் சென்ற வரலாற்றை. இருபத்தேழாவது செய்யுளின் விசேட உரையில் காண்க.

இறைவனுக்கு எந்நிலையிலும் எந்தத் துன்பம் வந்துருது என்ருலும், அன்பர்களின் உள்ளம் இறைவன் அன்பர்களின் பொருட்டுச் சிற்சில சமயங்களில் துன்பத்திற்கு ஆளாகும் போது அத்துயரால் இறைவன் வருந்தக் கூடும் என்று எண்ணி ஏங்கும். இதனை உளத்தில் கொண்டுதான் வள்ள லார் பாணர்க்கு ஆட்படச் சென்ற அந் நாள்வேர்க்கின்ற வெம் மணல் பேர்க்கின்றதோறும் உறுத்தியதோ ?" என்று வினவுவார் ஆயினர். (33)

நீயே.என் தந்தை அருளுடை யாய்என நேர்ந்துபெற்ற தாயேநின் பால் இடத் தெம்பெரு மாட்டிஇத் தன்மையில்ை நாயேன் சிறிதும் குணம் இலள் ஆயினும் நானும் உங்கள் சேயே எனப்புறம் விட்டால் உலகம் சிரித்திடுமே.

(பொ - ரை. அருளுடைய இறைவனே! என் தந்தையும் நீயே! என்னை வேண்டிப் பெற்ற தாயும் நீயே! உன் இடப் பக்கத்தில் உள்ள எம் தெய்வமாம் உமாதேவியும் நீயே! இன்னுேரன்ன காரணங்களால் நாய்க்கு நிகரான நான் கொஞ்சமேனும் நற்குணம் இல்லாதவனுய் இருந்தாலும், நான் கூட உங்கள் பிள்ளைதானே! அப்படி இருக்க என்னே வெளியே தள்ளிவிட்டால் உலகத்தில் உள்ள மக்கள் சிரிக்கமாட்டார்க்ளோ? (எ . து.)

(அ - செ.) நேர்ந்து - வேண் டி. சேய் - பிள்ளை புறம் - வெளி.

(இ - கு.) நானும், என்பதில் உள்ள உம்மை இறந்தது தழுவிய எச்ச உம்மை, இழிவு சிறப்பு உம்மை எனினும் ஆம். உலகம், இட ஆகுபெயர்.