பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 48

(வி . தை.) வள்ளலார் அம்மை அப்பரை நோக்கி, *இறைவனே! உன் பிள்ளைகள் விநாயகன், முருகன் மட்டுமா? நான்கூட உனக்குப் பிள்கள இல்லையா?" என்ற முறையில் தான் நானும் உங்கள் சேய்' என்றனர். உலகம் என்பது உலகத் தில் உள்ள மக்களைக் குறித்து நிற்கிறது. (84)

தெருளும் பொருளும்iன் சீர்அருளே எனத் தேர்ந்தபின்யான் மருளும் புவனத் தொருவரை யேனும் மதித்ததுண்டோ வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன் இருளும் கருமணி கண்ட அறிந்தும் இரங்கிலேயே.

(பொ - ரை.) இருண்ட கரிய நீலமணி போன்ற கழுத் தையுடைய இறைவனே! அறிவின் தெளிவும், செல்வமும் எனக்கு உன் சிறப்புடைய திருவருள்தான் என்று நான் அறிந்த பிறகு மயக்கமுடைய உலகில் எந்த ஒருவரையும் மதித்தது இல்லையே. எல்லோரும் அஞ்சும் உலகில் நான் துன்பத்தால் கலக்கமுற்று வாடிப் போகின்றேன். என் நிலையை அறிந்தும் என்னிடம் இரக்கம் காட்டவில்லையே." (எ . து.)

(அ சொ.) மணி - நீலமணி. கண்டா - கழுத்தை யுடைய சிவபெருமானேர். தெருள் - தெளிவு. வெருள் . அச்சம். புவி . உலகு. வெதும்பு - வாட்டம்.

(வி - ரை.) இறைவன் திருவருள் கைவரப்பெற்றவர் உலகில் உள்ள எவரையும் ஒரு பொருளாக மதிப்பதில்லை. இதுவே முதல் இரண்டடிகளின் கருத்து. இந்தக் கருத்துக்கு,

'திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்குன்

சீருடைக் கழல்கள் என்றெண்ணி ஒருவரை மதியா துருமைகள் செய்தும்

ஊடியும் உறைப்ப ய்ைத்திரிவேன்'

என்றும் நம்பி ஆரூரர் வாக்குத் துணைசெய்யும். (35)