பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருவருட்பா

பெண்ணுல் பயங்கும் எளியேனை ஆளப் பெருங்கருணை அண்ணுநின் உள்ளம் இரங்காத வண்ணம் அறித்துகொண்டேன் கண்ணுர் உலகில்என் துன்பம்எல் லாம்வெளி காணில்இந்த மண்ணு பிலத்தொடு விண்நாடும் கொள்ளே வழங்கும்என்றே.

(பொ. - ரை.) பேரருளுடைய அண்ணலே! பெண் இன் பத்தில் மயங்கும் எளியேனை ஆட்கொள்ள உன் உள்ளம் இரக்கம் காட்டாத நிலையின அறிந்து கொண்டேன். நீ என் மீது இரக்கம் காட்டாமைக்குக் காரணம், இடம் அகன்ற இந்த உலகத்தில் என் துன்பங்களே எல்லாம் வெளி உலகில் பிறரால் காணப்பட்டால் இந்த மண்ணுலகம் மட்டும் அன்று; கீழ் உலகம் மட்டும் அன்று; தேவலோகமும் தம்தம் சிற்றின் பத். துயரை மிகுதியாக எடுத்துச் சொல்லத் தொடங்கிவிடும் என்பதனுல்தான் போலும் என்பதை நான் இப்போது அறிந்து கொண்டேன்." (எ . து.)

(அ - சொ.) கண் - இடம். ஆர் - நிறைத்த மண்ணு . மண்ணுலகம் மட்டுமா. பிலம் . கீழ் உலகம், விண் - மேல் உலகம். கொள்ளே வழங்கும் - மிகுதியாக எடுத்துச்சொல்லும். (இ . கு.) பிலத்தொடு என்பதில் உள்ள ஒடு எண் ணுப் பொருளில் வந்த ஒர் இடைச்சொல். (36).

நெறிகொண்ட நீன் அடித் தாமரைக் காட்பட்டு நின்றவன்னைக் குறிகொண்ட வாழ்க்கைத் துயரகம் பெரிய கொடுங்கலிப்பேய் முறிகொண் டலைக்க வழக்கே வளர்த்த முடக்கிழநாய் வெறிகொண்ட தேனும் விடத்துணி யார்இல் வியன்நிலத்தே.

(பொ - ரை.) நேர்மையினக் கொண்ட உன் திருவடித் தாமரைகளுக்கு அடிமைப்பட்டுநின்ற என்னைக் குறிக்கோளேக் கொண்ட உலக வாழ்க்கையாகிய துன்பத்தால் பெரிய கொடிய வறுமைப் பேய், என்னே அடிமை ஆக்கி அலைத்தல்