பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 4领

முறையாகுமா ? இந்தப் பரந்த உலகத்தில் கால் அற்றும் கிழப் பருவம் உற்றும் இருந்த நாய் பைத்தியம் கொண்ட தாலுைம் அதனே வளர்த்தவர்கள் விட்டுவிடத் துணி வார் களா ? விடமாட்டார்களே!" (எ . து.)

(அ.சொ.) நெறி . நேர்மை, கலி - வறுமை, தரித்திரம். வியன் . பரந்த,

(இ - கு ) வியன் - உரிச்சொல்.

(வி - ரை.) தங்களால் வளர்க்கப்பட்ட நாய் பின்னல் கால் ஒடிந்து முடமாகிக் கிழப்பருவம் உற்றலும், அதைத் துரத்திவிட மனம் இசையார். அதுபோல இறைவரே! நான் வெறுக்கத்தக்க நிலையினே அடைந்தவனுயினும் நீ என்ஆனது கைவிடலாகாது’ என்று இறைவரை வள்ளலார் வேண்டினை என்பது இதன் உள்ளுறை. {37)

மதியாமல் ஆரையும் நான்இறு மாந்து மகிழ்கின்றதெம் பதியாம் உனது திருவருள் சீர்உரம் பற்றிஅன்ருே எதியார் படினும் இடர்ப்பட் டலயஇவ் ஏழைக்கென்ன விதியா இனிப்பட மாட்டேன் அருள்செய் விடையவனே.

(பொ. ரை.) இரடபவாகனத்தை யுடையவனே! நான் யாரையும் பொருட்படுத்தாமல் தருக்கி மகிழ்ந்து இருப்பதற் குக் காரணம், எங்கள் தலைவனும் உனது திருவருளின் சிறப் பாகிய வன்மை பற்றயே ஆகும். யார், எந்தத் துன்பப் பட்டு வருந்திலுைம் இந்த ஏழையாகிய நான் துன்பப்பட்டு அலேய ೯೯] ಹಿ೧565 ST தலைவிதியா? அப்படித் துன்பம் பட எனக்குத் தலவிதி கிடையாது. ஆகவே நான் துன்பப் படமாட்டேன். எனக்குத் திருவருள் புரிவாயாக. (எ . து.)

(அ - செ.) விடை - இரடபம். உரம் - வன்மை.