பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 திருவருட்யா

(இ.கு.) ஆர், யார் என்பதன் மருஉ வழக்கு எது+யார் என்ப்து எதியார் என்ருயது, குற்றியலிகரம் புணர்ச்சி நோக்கி ஆகும். எதி என்பதில் உள்ள இகரம் குற்றியலிகரம்.

(வி - ரை.) இறைவன் திருவருள்ால் விதியையும் வெல்லக் கூடும் என்னும் கருத்தினுல்தான் இடர்ப்பட்டலைய என்ன விதியா என்று வன்மையுடன் வினவுவார் ஆயிஞர். மார்க்கண்டேயர் விதியை வென்ருனர் அல்லரோ? இதை மனத்தில் கொண்டே இவ்வாறு உரத்துடனும் உரிமையுட னும் நம் ஐயா கூறினர். (38)

கற்கோட்டை நெஞ்சரும் தம்பால் அடுத்தவர் கட்குச்சும்மாச் சொற்கோட்டை ஆயினும் கட்டுவர் நின்னத் துணிந்தடுத்தேன் அற்கோட்டை நெஞ்சுடையேனுக் கிரங்கில அன்றுலவர் நெற்கோட்டை சந்தவன் நீஅல்ல யோமுக்கண் நின்மலனே. - (பொ. ரை.) "மூன்று கண்களையுடைய துயோனே! கல்லால் அமைந்த கோட்டைபோல அவ்வளவு வன்மை மிக்க நெஞ்சுடையவராயினும், தம்மைச் சரண் புகுந்தவர் கட்கு ஒரு சிறு உதவியைக்கூடச் செய்யாமல் போனலும், *நான் அதைச் செய்வேன். இதைச் செய்வேன்', என்று. சொல்லால் கோட்டை கட்டுவர். ஆல்ை, நீ இவ்வாறு பயன் அற்ற மொழிகளேச் சொல்லமாட்டாய் என்று உன்னத் துணிந்து அடைக்கலம் புகுந்தேன். நீ ஒரு சமயம் எடுக்க எடுக்கக் குறையாத நெற் கோட்டையைத் தந்தவன் அல்லையோ? அப்படி இருக்க அஞ்ஞான இருள் நிறைந்த கோட்டையாகிய மனம் கொண்ட எனக்கு ஏன் நீ இரக்கம் காட்டவில்லை? (ள -து.)

(அ . செ.) நின்மலன் - அழுக்கு இல்லாதவன், தூயவன். அல் இருள், அஞ்ஞானம். உலவா - வற்ருத.