பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 47°

(இ.கு.) கோட்டை நெஞ்சு உவமைத் தொகை. சொற்கோட்டை, மூன்ரும் வேற்றுமைத் தொகை.

(வி ரை.) உள்ளத்தில் வஞ்சகம், அஞ்ஞானம் முத லான தீய பண்புகள் குடிகொள்ளும் போது உள்ளம் இருள் அடையும், அதல்ை அல் கோட்டை நெஞ்சம் எனப் பட்டது. துணிந்து இறைவனை அடுத்தமைக்குக் காரணம், அவன் வெறும் பேச்சுப் பேசி அனுப்பாமல் அருள் புரிந்தே அனுப்புவான் என்பதல்ை என்க. சீவான்மாக்களாகிய நாம் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும் மலங்களைப் பொருந்தியவர்கள். இறைவன் இம் மலங்களுக்கு இடம் கொடாதவன். அதல்ைதான் ஈண்டு நின் மலன் எனப் பட்டான்.

அடியார்க்கு நல்லார் என்னும் பெயரிய வேளாளர் ஒருவர் இருந்தார். இவர் பெருஞ் செல்வர். இவர் அடியார்களுக்கு அன்னம் அளித்து இன்புற்று வாழ்ந்து வந்தார். இவரது அன்பை உலகறிய இவரது செல்வம் நாளும் நாளும் குறையு. மாறு இறைவர் திருஉள்ளத்தில் எண்ணம் கொண்டார். இறைவன் திருவுள்ளப்படி செல்வம் குறைந்தது. என்ருலும், அவர் கடன் வாங்கி அடியார்கட்கு அன்னம் அளித்து வந்தார். ه-اه கொடுப்பாரும் கடன் கொடுக்க மறுத்தனர். அடியார்களுக்கு அன்னம் கொடுக்காத போது தாம் மட்டும் உண்டு வருதல் முறை அன்று என்று எண்ணித் தாமும் அவர் மனைவியாரும் பட்டினி கிடந்தனர். அதன் பிறகு தாம் அடியார்களுக்கு உணவு அளிக்க இயலாத உடம்பை வைத்துக்கொண்டு என்ன பயன் எனக்கொண்டு தம் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு கட்டினர். இறைவர் வேளாளரது முடிவை உணர்ந்து அவர்க்கு எடுக்க எடுக்கக் குறையாத நெற் கோட்டையை அளித்து அவரிது துயரைப் போக்கினர். அதைப் பெற்று (உலவாக் கோட்டையை)