பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருவருட்பா

அவர் முன்போல் சிவனடியார்களுக்கு உணவளிக்கும் தொண்டில் ஈடுபட்டு வந்தார். இதன் விரிவைத் திருவிகள யாடல் புராணத்தில் உலவாக் கோட்டை அருளிய படலத் தில் காண்க. இந்த வரலாறே இங்கு, 'உலவா நெற் கோட்டை ஈந்தவன்' என்று கூறப்பட்டது. (39)

ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து வாதிக்க நொந்து வருந்துகின் றேன்.நீன் வழக்கம்எண்ணிச் சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்குகண்டாய் போதிக்க வல்லதல் சேய்உமை யோடென் உள் புக்கவனே. (பொ. - ரை.) உண்மை அன்பர் கட்கு உபதேசம் செய்ய வல்ல நல்ல குழந்தையாகிய முருகனுடனும், உமாதேவி யுடனும் என்னுள் புகுந்து அருள் செய்யும் இறையோனே! மூன்று மலங்களில் ஒன்ருன மாயை என்னும் அழுக்குத் தனக்கு உரிமையாக்கிக் கொண்ட உள்ளம் கொண்டவனுகிய என்கினத் துயரம், தொடர்ந்து தொடர்ந்து துன்புறுத்த அதனுல் வாடி வருந்துகின்றேன். நீ அடியார்களைச் சோதிக் கும் வழக்கத்தை எண்ணி, என்னேயு சே திக்கத் தொடங் காதே. எனக்குத் திருவருள் புரிய ஆரம்பிப்பாயாக' (எ-து.) (அ சொ.) சேய் - முருகனு குழந்தை, ஆதிக் கம் - உரிமை.

(இ - கு.) அடுத்து அடுத்து, அடுக்குத்தொடர். கண் டாய் என்பது முன்னிலை அசைச்சொல்.

(வி - ரை.) முருகப் பெருமான் அகத்தியர், அருணகிரி நாதர் முதலானவர்கட்கு உபதேசம் செய்தவர் ஆதலின் அவரைப் போதிக்க வல்ல நல்சேய்' என்றனர். வள்ளலார் உள்ளத்தில் சோமாஸ்கந்தர் குடிகொண்டிருந்தமையின் சேய் உமையோடு என் உள்புக்கவனே' என்றனர். இறைவர் அடியார்களைப் பலவிதமாக சோதித்து ஆட்கொண்டி வழக்கத்தைப் பெரிய புராணத்தில் பரக்கக் காண்க. (40)