பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 4.9

பிறைமுடித் தாண்டொரு பெண்முடித் தோய்பிள்ளைப் பேர்முடித்த நீறைமுடித் தாண்டஅஞ் செவ்வேணி செய்திட நீத்தம்மன்றில் மறைமுடித் தாண்டவம் செய்வோய்என் பால்அருள் வைத்தெளியேன் குறைமுடித் தாண்டுகொள் என்னே பலமுறை கூறுவதே.

(பொ - ரை.) பிறையைச் சூடி, அந்த இடத்திலேயே கங்காதேவியையும் தரித்து ஒப்பற்ற சரக்கொன்றை மாலையை யும் நிறைய முடித்து என்னே ஆண்டு கொண்ட அழகும் செம்மையுமான சடையையுமுடைய பெருமானே! தினமும் பொற்சபையிலும் வேதத்தின் உச்சியிலும் நின்று நடனத்தைத் தவருது செய்வோனே! என்மீது திருவருள் காட்டி எளியே னுடைய குறைகளே நீக்கி ஏற்றுக் கொள்வாயாக. நான் ஏன் உன்னிடம் என் துயரைத் தீர்க்க என்று பலமுறை சொல்ல வேண்டும் உனக்கு என் துயரைத் தீர்க்க வேண்டும் என்பது தெரியுமே." (எ . ம்.)

(அ . செ.) ஆண்டு அங்கு (சடையில்) பெண் . கங்கா தேவி. பிள்ளேட் பேர் . சரக்கொன்றை. வேணி - சடை. மன்று . சபை. மறைமுடி - வேதத்தின் உச்சி. என்னே . ஏன்.

இறைவன் நடனம் உலக இயக்க நடனம். ஆதலின், "நித்தம் மன்றில் தாண்டவம் செய்திட' எனப்பட்டது. இறைவன் எங்கும் ஆடுகின்றன். இதனைத் திருமந்திரம்,

பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன் ஐந்தில் வேதங்கள் ஐந்தில் மிகுமாம் அகம்தனில் ஒதும் கலகாலம் ஊழியுடன் அண்டப் போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே

நாதத் தினில் ஆடி நற்பதத் தேஆடி வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி போதத்தில் ஆடிப் புவன முழுதாடும் ததற்ற தேவாதி தேவர் பிரானே.

4.