பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 திருவருட்பா

என்னும் பாடல்களில் அறிவிப்பதைக் காண்க. இந்தக் கருத் தில்தான் மறைமுடித்தாண்டவம் செய்வோய்' என்றனர் வள்ளலார். மதலை என்பது சரக் கொன்றை மலரைக் குறிக் கும். அதனை முடித்தவர் என்னும் குறிப்பைப் பிள்ளைபேர் முடித்த' என்னும் தொடர் குறிப்பிடுகின்றது. மதலை என்னும் சொல் பிள்காயையும் குறிக்கும் ஆதலின், மதலை என்று கூருமல் பிள்ளைப்பேர் என்று நயம் தோன்ற வள்ள லார் குறிப்பிட்டார் என்க. (41)

தடங்கொண்ட பொன்அடி நீழலில் நான்வந்து நண்ணும்மட்டும் திடங்கொண்ட நின்புகழ் அல்லால் பிறர் புகழ் செப்பவையேல் விடங்கொண்ட கண்டத் தருட்குன்ற மேஇம வெற்புடையாள்

|டங்கொண்ட தெய்வத் தனிமுத லேம்ெ இறையவனே.

(யொ ரை.) 'திருப்பாற்கடலில் தோன்றிய விடத்தை அடக்கிக்கொண்ட கழுத்தையுடைய அருள்நிறைந்த குன்றமே! இமய மலையில் பிறந்த உமாதேவியை இடப்பக் கத்தே கொண்ட தெய்வமாகிய ஒப்பற்ற முழுமுதல் பொருளே! எங்கள் இறையவனே! திருநடனம் செய்கின்ற உன் அழகிய திருவடி நிழலில் வந்துஅடையும் வரையில் என் வாயால் வன்மையுடைய உன் புகழைத் தவிர்த்துப் பிற ருடைய புகழை நான் பேசுமாறு செய்ய வேண்டா. (எ.து.) (அ - செ.) இம வெற்பு - பனி மலை. தனி - ஒப்பற்ற. தடம் - நடனம். பொன் - அழகு. நண்ணும்மட்டும் - அடையும் வரையில்.

(இ - கு.) நடனம் என்பது நடம் என்றது இடைக் குறை. நிழல், நீழல் என ஆனது நீட்டல் விகாரம். செப்பு, திசைச் சொல்.

(வி - தை.) இறைவன் தேவர்களின் உயிர் பிழைக்க அருள் கொண்டு விடம் உண்டான். ஆதலின் அவுன் அருள்