பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. திருச்சிற்றம்பலம் உரை ஆசிரியர் முன்னுரை

அறிவால் சிவனே என்னும் பெருமைக்குரிய மாணிக்க வாசகர் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லு வார்' என்று கட்டளை பிறப்பித்திருப்பதை ஊன்றி உணர்கிற போது, அருளாளர்களின் திருப்பாடல்களின் பொருளை உணர்தல் இன்றியமையாதது என்பது நன்கு புலனுகிறது. இந்தக் காரணம் பற்றியே தோத்திர நூல்களுக்கும், சாத்திர நூல்களுக்கும்,-ஏன் இலக்கண இலக்கிய நூல்களுக்கும்உரைகள் எழுதப் பட்டுள்ளன; எழுதவும் படுகின்றன. இந்த முறைக்கேற்ப வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்த வேலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினர் திருவருட்பா முழுமைக்கும் உரை எழுதி வெளியிட வேண்டும் என்று ஒரு திட்டம் வகுத்தனர். இத் திட்டம் நிறைவேறச் சென்னை, குகத்திரு இரசபதி அடிகளாரை அணு கித் தம் கருத்தைச் சங்கத்தார் அறிவிக்க, அடிகளாரும் உளம் உவந்து உரை எழுத ஒவ்வித் திருவடிப் புகழ்ச்சி, விண்ணப் பக் கலிவெண்பா, நெஞ்சறிவுறுத்தல், சிவநேச வெண்பா ஆகிய இந்நான்கு நூல்களுக்கும் முற்றிலும் உரை எழுதி மூடித்து, ஐந்தாவதாக மகாதேவ மாலைக்கும் உரை எழுதத் தொடங்கி எண்பத்தைந்தாவது பாடல்கள் வரையிலும் உரை எழுதி ஏனய பாடல்களுக்கும் விரிவுரை வரைந்து முடிப்பதற்கு முன்பு, கூத்தப் பெருமானின் குஞ்சித்த சேவடி யில் இன்புறும் நிலையை எய்தினர்.

இந்த நிலையில், வேலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் தலைவர் திருக்குறள் நம்பி, திரு. ஊ. வ. தட்சணு மூர்த்தி முதலியார் அவர்கள், குகத்திரு. இரசபதி அடிகளார் எழுதாது விட்ட பதினேந்து பாடல்களுக்கு (எண்பத்தாறு முதல் நூருவது பாடல்கள் வரை) அடியேனே உரை எழுது மாறு அன்புடன் வேண்டினர். இஃது இறைவன் திருவருள் சம்மதம் போலும் என்று எண்ணி அவ் வேண்டுகோட்கு இணங்கி மகாதேவ மாலையில் ஈற்றில் உள்ள பதினைந்து பாடல்களுக்குத் திருவருள் துணைகொண்டு உரை எழுதி முடித்தனன்.

பிறகு சங்கத்தின் தலைவர் திரு. ஊ. வ. தட்சணுமூர்த்தி முதலியார் அவர்கள், தொடர்ந்து திருவருள் முறையீட்டிற்கும்,