பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 51

குன்றே எனப்பட்டான். சிவபெருமானுக்கு ஒப்பு எவரும் இல்லை ஆதலின், அவனைத் தனிமுதலே என்றனர். 'தனக்குவமை இல்லாதான் என்பர் திருவள்ளுவர். ஒப்பு னக்கு இல்லா ஒருவனே என்பர் மணிமொழியார். பெருமா னுக்கு முன் எவரும் தோன்றிலர் ஆதலின், அவனே முதலே' என்றனர். முன்னைப் பழம்பொருட்கும் முன்னேப் பழம் பொருளே’’ என்பது திருவாசகம். 'எல்லார்க்கும் முன்னே தோன்றி முளைத்தானே' என்பது அப்பர் வாக்கு. (42)

விழிக்கஞ்ச னம்தரும் மின்னர்தம் வாழ்க்கையில் வீழ்ந்தயலோர் மொழிக்கஞ்சி உள்ளம் பொருதுநின் நாமம் மொழித்தெளியேன் குழிக்கஞ்சி போல்மயங் கின்றேன் அருளக் குறித்திலேயேல் பழிக்கஞ்சி ைேய்இன்னும் என்பழிக் கஞ்சப் படும் உனக்கே. (பொ - ரை ) பழிக்கு அஞ்சினவனே! கண்ணுக்கு மை பூசும் மின்னலைப் போன்று ஒளியுடன் விளங்கும் பெண்க ளுடன் வாழும் வாழ்க்கையில் ஆழ்ந்து, அன்னியர்களின் பழிச் சொல்லுக்குப் பயந்து மனம் சகிக்கமாட்டாது உன் திருப்பெயராகிய ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறியும், ஏழை யாகிய நான் குழியில் ஊற்றப்படும் கஞ்சியைப்போல மயங்கு கின்றேன். இப்படி வருந்தும் எனக்குத் திருவருள் புரிய உன் உள்ளத்தில எண்ணங்கொள்ளவில்லை என்ருல், என் பழிக்கும் நீ அஞ்சும் நில உனக்கு வந்து சேரும்." (எ - து,) (அ - சொ.) அஞ்சனம் - மை மின்னர் - மின்னல் ஒளி போன்ற பெண்கள். நாமம் - பெயர்.

(இ. கு.) மயங்குகின்றேன் எனற்பாலது மயங்கின் றேன் என்ருயது இடைக்குறை.

(வி - ரை.). யார் பெண் போகத்தில் ஈடுபட்டு வாழ்க் கையைப் பாழ் படுத்துகின்ருர்களோ, அவர்களே நல்லோர் பழித்தும் இழித்தும் பேசுவர். அதனே உட்கொண்டே