பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 திருவருட்பா

'அயலோர் மொழிக்கு அஞ்சி' என்றனர். கழிநீர், கஞ்சி முதலானவற்றை ஒரு குழியில் ஊற்றிக்கொண்டே இருப்பர். அதனை மாடு ஆடு குடித்துச் செல்லும், இங்கு வள்ளலார் குழிக் கஞ்சியை உவமை கூறியதன் கருத்து, அந்தக் குழி என்றும் கஞ்சி ஊற்றப்பட்டு நிறைந்திருப்பது போல நானும் காம மயக்கத்தாலும், துயராலும் என்றும் நிறைந்து கொஞ்சங்கூட வற்ருது துயர்கின்றேனே என்பதை விளக்கு வதற்காகவே ஆகும். குழி ஈண்டுப் பள்ளமான நீர்த் தொட்டி. குழி தம்மையும், கஞ்சி காம மயக்கம், கோபம், துன்பம் ஆகியவற்றையும் குறித்து நிற்கின்றன.

ஒரு பிராம்மணன் தன் மனேவியுடனும் தன். குழந்தை யுடனும் தன் மாமனர் வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டான். வெயில் மிக்கமையால் ஒர் ஆலமர நிழலில் தன் மனைவியை யும் குழந்தையையும் தங்கவிட்டுத் தண்ணிர் கொணரச் சென் ருன். அவன் வருவதற்குள் ஒர் அம்பு அவன் மனைவி மீது பாய்ந்து அவளேக் கொன்றுவிட்டது. அவன் அந்த நிலையைக் கண்டு வருந்திச் சுற்றும் முற்றுப் பார்க்கையில், சிறிது தூரத்தில் ஒரு வேடன் கையில் அம்பும் வில்லுமாக நிற்பதைக் கண்டு; இவன்தான் தன் மனைவியைக் கொன்ருன் என்று உறுதிசெய்து, அவனைப் பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றன். வேடன் தான் கொல்லவில்லை என்று எவ்வளவு கூறியும் அவனைச் சிறையில் அடைத்துவிட்டனர்.

பாண்டியன் உள்ளம் மட்டும் அவனைச் சிறையில் இட் டதுபற்றி அம்ை தி கொள்ளவில்லை. இதன் உண்மை யினை இறைவன்தான் தீர்க்கவேண்டு மென்று மதுரைப் பெருமானிடம் முறையிட்டான். சொக்கேசப் பெருமான் பாண்டியனையும் மனைவியை இழந்த பிராம்ம்ணனையும் அங்கு நடக்க இருக்கும் ஒரு திருமணத்திற்கு உருமாறிச் செல்லப் பணித்திட்டான். அப்படியே இருவரும் சென்றிருந்தனர்.