பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 纥$

அத் திருமணத்தில் இரண்டு யமதூதர்கள் வேற்றுரு வில் வந்திருந்தனர். அவர்கள் மணமகனுடைய உயிரைக் கவர்ந்து போகவே வந்தவர்கள். ஓர் இயம தூதன் மண மகனின் உயிரை எப்படிக் கொண்டு செல்வது?' என்றபோது மற்ருெரு தூதன், இஃது என்ன அரிய காரியமா? பாாப்பினியின் உயிரை என்ருே மரத்தில் பொத்தி இருந்த அம்பைக் காற்ருல் அசைத்து அஃது அவள்மீது பாயச்செய்து அவள் உயிரைக் கொல்ல வில்லையா? அதுபோல் மாட்டை மிரளவிட்டு இவன் உயி ரைக் கொல்வோம்' என்று கூறினன். அவ்வாறே ஒரு மாடு மேளச் சத்தத்தலுைம் மற்றும் திருமண ஆரவாரத்தாலும் மருண்டு மணமகனைக் குத்திக் கொன்றது. இந்த நிகழ்ச்சி யினை நேரே கண்ட இருவர்களும் பார்ப்பினி இறந்தமைக்குக் காரணன் வேடன் அல்லன் என்று உணர்ந்து அவனே விடுதலை செய்தனர்.

பழி ஓர் இடம் பாவம் ஓர் இடம் ஆயிற்று அன்ருே ! ஆகவே இது பழிக்கு அஞ்சினதாயிற்று. இந்த வரலாறு திருவிளையாடல் புராணத்தில் பழிக்கஞ்சின படலத்தில் உளது. இதனேயே ஈண்டுப் பழிக்கஞ்சிைேய் ' என்றனர்.

சேல்வைக்கும் கண்உமை பாகாதீன் சித்தம் திருஅருள்என்

பால்வைக்கு மேல்இடர் எல்லாம் என விட்டப் பால்நட்க்கக் கால்வைக்கு மேதல் சுகவாழ்வென் மீதினில் கண்வைக்குமே மால்வைக்கும் மாயைகள் மண்வைக்கு மேதங்கள் வாய்தனிலே,

(பொ. ரை.) சேல்மீனப் போன்ற கண்களைப் பெற்ற உமாதேவியை இடப் பக்கத்தே வைத்துள்ள இறைவனே! எனக்குத் திருவருள் புரிய உன் மனம் சிறிது தயவு கொள்ளு மால்ை, என் துன்பம் எல்லாம் என்னைவிட்டு அப்பால் நடந்துபோகக் கால் எடுத்துச் செல்லுமே. சுகவாழ்வு என்மீது நர்ட்டம் வைக்குமே. மயக்கத்தைச் செய்யும்