பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 திருவருட்பா

மாயைகள் தம் வாயில் மண் போட்டுக் கொள்ளுமே (எ -- து.)

(அ - சொ.) சேல் - சேல்மீன். மால் - மயக்கம்.

(வி. ரை.) இறைவியின் திருக்கண்கள் சேல்கெண்டை போன்றவை. இது குறித்தே அவள் மீனட்சி எனப்படுவாள். அட்சி என்பதன் பொருள் கண்ணை யுடையவள் என்பது. மீனுட்சி என்பதன் தமிழ்ப் பெயர் கயற்கண்ணி என்பது.

'அங்கயற்கண்ணி தன்னெடு அமர்ந்த ஆலவாயான்' என்பது திருஞான சம்பந்தர் திருவாக்கு மாயைகள் மண் வைக்கும் என்பதன் கருத்து வாயில் மண்ணைப் போட்டுக் கொண்டு போகும் என்பது. (44)

ஒருமாது பெந்த மகன்பொருட் டாக உவந்துமுன்னம் வருமாமன் ஆசி வழக்குரைத் தோய்என் வழக்குரைத்தற் கிருமா நிலத்தது போல்வேடம் கட்ட இருத்திகொலோ திருமால் வணங்கும் பதத்தவ யான் உன் சிறுவன்அன்றே.

(பொ. ரை.) மகாவிஷ்ணு வணங்குகின்ற திருவடிகளே யுடையவனே ! முன் ஒரு சமயம் ஒரு வணிக மாது பெற்ற மகனுக்காக மனம் மகிழ்ந்து மாமனுக வந்து வழக்கை வென்ற வனே! அதுபோல என் வழக்கையும் பேசித் தீர்ப்பதற்கு இந்தப் பெரிய உலகில் நீ ஒரு தோற்றத்தைக் காட்ட இருக்கி ருயோ? நான் உன் மகன் இல்லையே. நீ எப்படி என் பொருட்டு வழக்குத் தீர்க்க வருவாய் ! (எ - து).

(அ - செ.) திருமால் - விஷ்னு உவந்து - மகிழ்ந்து. இருமா - மிகப்பெரிய,

(இ - கு.) பதத்தவ, விளிவேற்றுமை. பொருட்டு என்பது நான்காம் வேற்றுமைச் சொல் உருபு. இருமை + மா