பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 55

எனப் பிரிக்கவேண்டும். பெரிய என்னும் பொருளைக் குறிக்க இரண்டு சொற்கள் வந்தமையின் இஃது ஒருபொருள் பன்மொழி எனப்படும்.

(வி - ரை.) மதுரையில் தனபதி என்னும் பெயரிய வணிகன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பிள்ளை இல்லை. ஆகவே, விதவையான தன் தங்கை மகனைத் தன் மகன் போல ஏற்று வளர்த்தான். ஒருநாள் தனபதி தன் மனைவிமீது கொண்ட காதல் பெருக்கினல் தங்கையோடு சண்டை யிட்டான். அப்போது தங்கை தன் தமைய8ன நோக்கி, நீ பிள்ளைப்பேறு அற்ற பாவி. என் மகளுல்தான் புத்தென்னும் நரகத்தைப் போக்குவாய்' என்று பேசினுள். இந்த மொழி களைக் கேட்ட தனபதி மறுபிறப்பிலேனும் பிள்ளைப்பேற்றை அடையத் தன் பொருள் முழுவதையும் தத்தெடுத்து வளர்த்த பிள்ளைக்கு எழுதி வைத்துவிட்டுத் தன் மனேவியுடன் காட்டில் தவஞ்செய்யப் போய்விட்டான். தனபதி திரும்பி வராததைக் கண்ட தனபதியின் சுற்றத்தார் சிறுவன் பெற்ற சொத்துகளைப் பிடுங்கிக்கொண்டனர்.

த ைபதியின் தங்கை, சொக்கலிங்கப் பெருமானிடம் முறையிட்டாள். இறைவர் அவள் கனவில் தோன்றி 'நாளே க்கு நாம் நீதிமன்றத்தில் வந்து உன் வழக்கை உன் பக்கம் தீர்த்துவைப்போம்" என்று கூறுஞர். அவ்வாறே இறைவர் சிறுவனின் மாமகிைய தனபதியின் வடிவுடன் வந்து வழக்கை வென்று. செல்வம் முழுவதையும் சிறுவனே பெருமாறு செய்தார் இதுவே, 'மாமனுகி வழக்குரைத்தோய்’ என் பதில் அடங்கிய வரலாறு. இதனைத் திருவிளையாடற் புரா ணத்தில் காண்க (45)

முன்னஞ்சம் உண்ட மிடற்றர சேநீன் முழுக்கருணை அன்னம் சுகம்பெற உண்டும்உன் பால்அன் படைந்தில்தால் கன்னெஞ்ச மோகட்டை வன்நெஞ்ச மோஸ்ட்டிக் காய்நெஞ்சமோ என்னெஞ்சம் எந்நெஞ்ச்மோதெரியேன்.இதற் கென்செய்வதே.