பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 திருவருட்யா

(பொ - ரை.) முன் ஒரு சமயம் விடத்தை உண்ட கழுத்தையுடைய தலைவனே ! உன்னுடைய முழுக்கருணை யில்ை, உடல் தல் வளம்பெறச் சோற்றை உண்டும் உன் னிடம் என்மனம் அன்பு கொள்ளவில்லையே. இதல்ை என் மனம் கல்லாகவோ அல்லது கட்டைபோன்று வன்மை மிக்கதாகவோ, அல்லது எட்டிக் காய்போன்று கசப்புடைய தாகவோ இருக்குமோ ? என் மனம் மேலே காட்டப்பட்ட பொருள்களுள் எதைப் போன்றதாக இருக்குமோ ? ஒன்றும் புரியவில்லையே. இதற்கு நான் என்ன செய்வேன்?' (எ . து.)

(அ சொ.) நஞ்சம் . விடம். மிடறு - கழுத்து.

(இ - கு) நஞ்சு என்பது நஞ்சம் என்றிருப்பது அம் எனும் சாரியை ஏற்றிருப்பதனுல் என்க. மிடறு - அரசு. இலது + ஆல். ஆல் என்பது அசை

(வி - ரை.) நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு பொருளும் இறைவன் திருவருளில்ை பெறுவதாகும். ஆகவேதான் முழுக்கருணை அன்னம் சுகம்பெற உண்டும் என்றனர். (46)

வானம் விடாதுறு கால்போல்என் தன்னை வளத்துகொண்டே மானம் விடாதிதற் கென்செய்கு வேன்நின்னை வந்தடுத்தேன் ஊனம் விடாதுழல் நபோன் பிழையை உளங்கொண்டிடேல் ஞானம் விடாத நடத்தோய்நீன் தண்அருள் நல்குகவே,

(பொ - ரை.) ஞானனந்தத் திருநடனம் புரியும் கூத் தரசே! வானத்தை விட்டு நீங்காத பெருங் காற்றுப்போல் என்ன வளைந்துகொண்ட அபிமானமானது என்னே விட வில்லை. இதற்கு நான் என் செய்வேன்? இந்த உலகப் பற்றை விட்டு நீங்கவேண்டும் என்னும் காரணத்தினுல்தான் உன்னை வந்தடுத்துள்ளேன். தீமையை விடாமல், அலகின்ற நாய் போன்றவனை நான் செய்கின்ற தவறுகளே மனத்தே