பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருவருட்பர

புரிந்தாய் பேய்கூடச் செய்யாத வன்மையான நோன்பு களைச் செய்து பெற்ற பிள்ளைக்கு நல்தாய் கூட, நீ செய்த நன்றியைப் போலச் செய்ய மாட்டாள். நீ இன்று செய்த நன்மை உன் கருணப் பெருக்கைக் காட்டுகின்றது." (எ-து.) (அ - சொ) நடை - நடத்தை, தீய ஒழுக்கம். செயா நின்ற - செய்கின்ற. மிடி . வறுமை. தவம் - நோன்பு.

(இ . கு.) நாயும், பேயும் என்பனவற்றில் உள்ள உம் இழிவு சிறப்பு. தாயும் என்பதில் உள்ள உம் உயர்வு சிறப்பு. நாணமும். நோயும் என்பன்வற்றில் உள்ள உம் எண் ணும்மை. செயாநின்ற என்பதை செய் + ஆநின்று + அ, என்று பிரிக்கவும். ஆநின்று என்பது நிகழ்கால இடைநிலை. அ, பெயரெச்ச விகுதி.

(வி - ரை.) பொறுத்தற்கரிய தவம் செய்தமையின் பேயும் செயாததவம்' எனப்பட்டது. வறுமையுற்ற காலத்தில் தாயும் தன் மகனை விரும்பாள். 'இல்லானே (பொருள் இல்லாதவனே) இல்லாளும் வேண்டாள் ஈன் றெடுத்த தாய் வேண்டாள் செல்லாது இவன் வாயிற் சொல்’’ என்னும் ஒளவையாரின் அருள் வாக்கைக் காண்க, வறு மையின் கொடுமையினைப் பற்றிக் கூறவந்த ஒரு புலவர் தாங்கொணு வறுமை வந்தால் சபைதனில் செல்ல நானும் வேங்கைபோல் வீரம் குன்றும் விருந்தினர் காண நானும் பூங்கொடி மனேயாட் கஞ்சும் புல்லருக் கிணங்கச் செய்யும் ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிச்கும் தானே எல்று கூறுதல் காண்க. இது குறித்தே நாணம் உள் நோயும் செயாநின்ற வன்மிடி' எனப்பட்டது: (48) உருவத்தி லேசிறி யேன் ஆகி ஊகத்தில் ஒன்றும்இன்றித் தெருவத்தி லேசிறு கால்விசி ஆடிடச் சென்ற அந்தப் பருவத்தி லேதல் அறிவளித் தேஉனப் பாடச்செய்தாய் அருவத்தி லேஉரு வாைேய்தின் தன்அளி யார்க்குளதே.