பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 5-9

(பெ. . ரை.) அருவ வடிவிலும் உருவ வடிவுகொண்ட சிவபெருமானே! வடிவத்தில் சிறியவாகிைப் பகுத்தறிவு சிறிதும் இல்லாமல், தெருவில் கால்வீசி ஆடச் சென்ற அந்தச் சிறு பருவத்திலேயே நல் அறிவு தந்து உன்னைப் பாடும்படி செய்தாய்! இப்படி எனக்குச் செய்த உன் நல் கருணை எவர்க்கேனும் இருக்க முடியுமா ? ஒருவருக்கும் இருக்க முடியாது." (எ . து.)

(அ - சொ.) அருவம் - உருவற்ற வடிவம், யூகம் பகுத் தறிவு, ஒன்றும் இன்றி. சிறிதும் இல்லாமல், தண்ணளி - நல் கருணை.

(இ - கு.) அருவத்தில் உருவானேய், முரண்தொடை. இன்றி, குறிப்பு வினைஎச்சம்.

(வி . ரை.) இறைவன் ஒன்பது பேதங்களிலும் கலந்து நின்று ஆன்மாக்கள் உய்ய ஐந்தொழில் நடத்துவான் அவனு. டைய ஒன்பது பேதங்கள் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன் (இந்தப் பேதங்கள் உருவத் திருமேனிகள் ஆகும்) விந்து, நாதம், சத்தி, சிவம் (இந்தப் பேதங்கள் அருவத் திருமேனிகள் ஆகும்) சதாசிவம், (இந்தப் பேதம் அருவுரு) என்பன. இவ்வொன்பது உருவங்களையும் உணர்த்தும் முறை யில் அருவத்தில் உருவானேய் ' என்றனர். இந்தத் திருமேனியின் அருமையினைச் சிவஞான சித்தியார்,

' உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவிறந்த

அருமேனி அதுவும் கண்டோம் அருவுரு ஆனபோது திருமேனி உபயம் பெற்ருேம் செப்பிய மூன்றும் நந்தம் கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே.' என்று விளக்குதல் காண்க.

வள்ளலார் இந்தப் பாட்டின் மூலம் இறைவர் சிறுவய தில் தம்மை ஆட்கொண்ட அருள்திறத்தைப் பாராட்டிப்