பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 திருவருட்யா

பேசியுள்ளார். பாடுவித்தால் ஆர் ஒருவர் பாடா தாரே' என்று அப்பர் கூறுவதல்ை, இறை திருவருளால் இளமை யிலும் பாடக் கூடும் என்பது அறிய வருதல் காண்க. ஆளுடைய பிள்ளையாரும் இளவயதில் பாடினர் அல்லரோ ?.

மான்எழுந் தாடும் கரத்தோய்நின் சாந்த மனத்தில்சினம் தான்எழுந் தாலும் எழுகஎன் றேஎன் தளர்வைஎல்லாம் ஊன்எழுந் தார்க்கநீன் பால்உரைப் பேன்.அன்றி ஊர்க்குரைக்க நான்எழுந் தாலும்என் நாளழு மோமொழி நல்கிடவே.

(பொ. ரை.) மான் எழுந்தாடும் கையை யுடைய இறைவனே! உனது பொறுமை நிறைந்த மன்த்தில் கோபம் வந்தாலும் வரட்டும் என்றுதான் என் மனச் சோர்வை என் உடல் எழுந்து ஆரவாரம் செய்ய உன்னிடம் சொல்வேனே அல்லாமல், ஊராரிடம் சொல்லப் புறப்படமாட்டேன். ஒரு வேனே என் உடல் ஊர் மக்களிடம் கூறக் கிளம்பினுலும், என் நாக்கு அவர்களிடம் என் குறையை எடுத்துச்சொல்ல முற் படாது. (எ . து.)

(அ - சொ.) சினம் - கோபம். ஊன் - தசை. ஆர்க்க - ஆரவாரம் செய்ய. நல்கிட ஈண்டுச் சொல்ல என்னும் பொருளது. மொழி - சொல்.

(இ . கு.) ஊர்க்கு என்பது ஊரில் உள்ள மக்களுக்கு எனப் பொருள் தருதலின் இட ஆகுபெயராம்.

(வி - ரை.) நாம் உணர்ச்சி வேகத்தில் பேசத் தொடங் கும்போது உடல் மிக்க ஆரவாரத்தோடு பேசும். ஆதலின், 'உடல் எழுந்து ஆர்க்க” எனப்பட்டது. (50)

வனம்எழுந் தாடும் சடையோய்தின் சித்தம் மகிழ்தல்அன்றிச் சினம்எழுந் தாலும் எழுகஎன் நேஎன் சிறுமையைதின் முனம்எழுந் தாற்றுவ தல்லால் பிறர்க்கு மொழிந்திடஎன் மனம்எழுந் தாலும்என் வாய்எழு மோஉள்ள வாறிதுவே.