பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W1

வடிவுடைமாணிக்க மாலைக்கும் உரை எழுத் வேண்டினர். அவ்: வேண்டுகோளையும் ஏற்றுத் திருவருள் முறையீட்டிற்கும் உரை எழுதத் தொடங்கினன். திரு. முதலியார் அவர்கள் திருவருள் முறையீட்டில் உள்ள இருநூற்று முப்பத்திரண்டு பாடல்கட்குரிய உரையினை ஏறக்குறைய பத்துப் பாரத்தில், அதாவது நூற்று அறுபது பக்கத்தில் முடிக்குமாறு கூறினர். ஆனல் பற்பல பாடல்களுக்கு இன்றியமையாத விளக்கங்களை எழுத வேண்டி இருந்தமையின், அவர் விரும்பியபடி பத்துப் பாரத்தில் உரை முற்றுப் பெறுதற்கு இயலாமல் போயிற்று. ஆகவே இந்த முதல் பகுதி 1 19 பாடல்களுக்குரிய உரை யினைமட்டும் கொண்டு வெளிவருகிறது. எஞ்சியுள்ள பாடல் களுக்குரிய உரை விளக்கம், அடுத்த பகுதியில் நிறைவுறும், என்னுல் எழுதப்பட்டு வெளிவரும் இந்த உரை, ஒவ், வொரு செய்யுளும் பொழிப்புரையும், அருஞ்சொல் விளக்க மும், இலக்கணக் குறிப்பும், விசேட உரையும் கொண்டு திகழ்கிறது என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாண்டு ஜூன் மாதம் முதற்கொண்டு கல்லூரியி: னின்று விலகி, ஒய்வு பெறும் நிலையுற்றுள்ள என்ன, யான் வழிபடும் முழுமுதற் பரம்பொருளாம் அம்மை அப்பர் திருவருள் சுரந்து, வேலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தார் வழி, அரிய பெரிய அருள் நூலாம் திருவருட்பா விற்கு உரை எழுதப் பணித்தமைக்கு அப்பெருமானரின் பொன்னர் திருவடிகளே வந்தித்து வாழ்த்தி வணங்கு கின்றேன். இச் சங்கத்தாருக்கும் என் நன்றி அறிதலான வணக்கத்தை அறிவித்துக் கொள்ளுகின்றேன். அருட் பெருஞ்சோதியின் மலர் அடிகளே மறவாத ஆன்மநேய ஒருமைப்பாட்டை அவாவும் அன்பர்கள், ஷெ சங்கத்தார் வெளியிடும் உரை நூல்களை வாங்கி அவர்களுடைய அரும் பெருந் தொண்டிற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண் டிக்கொள்கின்றேன். 43, விஜயவிக்னேசுவரர் ) இங்ஙனம்,

கோவில் தெரு,

| சூன், சென். : பலுக்-கண்ணப்ப முதலியார்.

37–4–68. J