பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 6 ከ

(பெ. . ரை.) அழகு நிறைந்து விளங்கும் சடையுடைய இறைவனே ! உன் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளாது கோபம் கொண்டாலும் கொள்க என்று அறிந்தே, என் குறைகளை உன் திருமுன்கூறி மனம் அமைதி கொள்வதே அல்லாமல், பிறரிடம் சொல்ல என் உள்ளம் ஒருவேளை எண்ணம் கொண்டு புறப்பட்டாலும், என்வாய் அவர்களிடம் கூற. முற்படுமா? உண்மை இதுதான். பொய் அன்று." (எ . து.)

(அ - செ.) வனம் - அழகு, சிறுமை - குறைகள், ஆற்றுவது அமைதி உறுவது.

(இ . கு.) முனம் என்பதில் உள்ள அம் சாரியை. பிறர் இடம் என்று ஏழாம் வேற்றுமையுடன் வரவேண்டியது. பிறர்க்கு என நான்காம் வேற்றுமை பெற்று வந்திருப்பது உருபு மயக்கம் பற்றி என்க. (51).

சிற்பர மேஎம் சிவமே திருஅருள் சீர்மிகுந்த கற்பக மேஉனச் சார்ந்தோர்க் களிக்கும்நீன் கைவழக்கம் அற்பம்அன் றேபல அண்டங் களின்அடங் காததென்றே நற்பர ஞானிகள் வாசகத் தால்கண்டு நாடினனே.

(பொ , ரை.) மேம்பட்ட பரம்பொருளே ! எங்கள் சிவபெருமானே ! திருவருளாகிய மேன்மை மிகுந்த கற்பகமே ! உன்னேச் சரண் புகந்தவர்களுக்கெல்லாம் நீ திருவருள் பேற்றைக் கொடுக்கும் உன் திருக்கை யின் வழக்கம் சாதாரணமானது அன்று. நீ அருளும் பான்மை பற்பல உலகங்களிலும் அடங்காதது ' என்று நல்ல மேன்மையுடைய ஞானிகள் கூறும் திருவார்த்தை களே அறிந்துதானே உன்னே நாடி வந்தேன்?' (எ . து.)

(அ . சொ.) சித்பரம் மேம்பட்ட பரம்பொருள் (இறை. வன்) அண்டம் - உலகம் பரம் - மேலான.