பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 திருவருட்பா

(வி. ரை.) இறைவன் அன்பர்கட்குத் திருவருள் புரியும் பான்மை, அற்பமானது அன்று. அது மிக மிகப் பெரியது. இந்த அருள்பான்மையை மணிமொழியார்.

கோலம் உண் டாகவே காதல்செய் துய்மின் கருதரிய

ஞாலம் உண் டாைெடு நான்முகன் வானவர் நண்ணரிய ஆலமுண் டான்.எங்கள் பாண்டிப் பிரான்தன் அடியவர்க்கு மூலபண் டாரம் வழங்குகின் ருன்வந்து முந்துமினே."

என்று விளக்கமுறக் கூறியுள்ளனர். இதனுல்தான் 'கை வழக்கம் அற்பம் அன்றே, பல அண்டங்களிலும் அடங்காது' எனப்பட்டது.

அண்டங்கள் பற்பல. இந்த உண்மையினையும் நம் திருவாதவூரர்,

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பரும் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றுக் கோடியின் மேற்பட விரிந்தன. என்பர்.

இவ்வாறு மணிமொழியார் கூறி இருப்பதால்தான் நற்பர ஞர்னிகள் வாசகத்தால் கண்டு நாடினனே' என்றனர் நம் ஐயா. (52)

வருஞ்செல்லுள் நீர்மறுத் தாலும் கருணை மருதனங்கள் பெருஞ்செல்வ மேளம் சிவமே நீனத்தொழப் பெற்றும்இங்கே தருஞ்செல் அரிக்கும் மரம்போல் சிறுமைத் தளர்நடையால் அருஞ்செல்லல் மூழ்கிநிற் சின்றேன் இதுநின் அருட்கழகே.

(பொ. ரை.) ஆகாய வழியே செல்கின்ற மேகம்

தன்னிடம் உள்ள நீரைப் பெய்ய மறுத்தாலும், கருணை செய்வதை மறக்காத எங்கள் பெருஞ் செல்வமே! எங்கள்