பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 68

சிவமே! உன்னை வணங்கும் பேற்றை அடைந்தும், இயற்கை உண்டுபண்ணும் செல்லால் அரிக்கப்பட்ட மரம்போல், வறுமையாகிய தளர்நடையால், துன்பத்தில் மூழ்கி நிற் கின்றேன். இவ்வாறு துயரால் வருந்தி இருப்பது உன் பேரருள் தன்மைக்கு அழகாகுமா ?” (எ . து.)

(அ - சொ.) செல் - மேகம், செல் எனும் ஒரு வகைப் பூச்சி. மருத - மறவாத. சிறுமை - வறுமை. செல்லல்துன்பம்.

(வி ரை.) இறைவன் திருவருள் என்றைக்கும் அடிய வர்கட்கு உண்டு என்னும் உண்மையிளே உணர்த்தவே *செல்லுள் நீர் மறுத்தாலும் கருணை மருத எங்கள் பெருஞ் செல்வமே' என்றனர். ஈஸ்வரனே என்பதன் நேர் தமிழ் மொழி செல்வமே' என்பது. (58)

கருமுகம்நீக்கிய பாணனுக் கேகன கம்கொடுக்கத் திருமுகம் சேரற் களித்தோய்என்றுன்னத் தெரிந்தடுத்தேன் ஒருமுகம் பார்த்தருள் என்கின்ற ஏழைக் குதவிலேயேல் உருமுக ஆர்க்கும் விடையோய் எவiமற் றுதவுவரே.

(பொ. ரை.) இடியும் கூடத் தளர் வெய்தும்படி ஆர வாரம் செய்யும் இரடப வாகனமுடைய இறைவனே ! வறுமையால் துன்பமுற்ற பாணபத்திரனுக்கு அவ்வறுமை நீங்க அவனுக்குப் பொன் கொடுத்து உதவும்படி ஒரு கடிதம் எழுதிச் சேரமான் பெருமாள் நாயனருக்கு அனுப்பியவன் என்று உன் கொடைக் குணத்தை உணர்ந்துதான் உன்னே அடைந்தேன். அப்பாணனுக்கு அருளியதுபோல, நீ திரு முகம், (கடிதம்) காட்டி அருள மனமில்லை என்ருலும், உன் திருமுகத்தால் என்ன ஒருமுறை பார்த்தேனும் அருள் செய்க என்கின்ற இந்த ஏழைக்கு நீ உதவிசெய்யவில்லை என்ருல், எனக்கு வேறு யார் உதவி செய்வர் ' (எ . து.)