பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 4. திருவருட்பா

(அ - செ.) கருமுகம் - வறுமைக் கொடுமையால் மாறுபட்ட முகம். கனகம் - பொன், திருமுகம் - கடிதம், சேரன் . சேரமான் பெருமாள் நாயனர், உரும் . இடி, உக . தளர்வுகொள்ள, ஆர்க்கும் . ஆரவாரம் செய்யும், விடை - இரடபம்.

(இ கு.) கருமை + முகம்.

(வி - ரை.) இரடபத்தின் ஆரவாரம் இடி ஒசையின் மிக் கிருக்கின்றமையின் "இடி உக' எனப்பட்டது. ஒருமுகம்

பார்த்தருள் என்று நம் ஐயா இரக்கத்துடன் வேண்டுவதைப் படிக்கும்போது,

பாராயோ என்னைமுகம் பார்த்தொருகால் என்கவலை தீராயோ வாய் திறந்து செப்பாய் பராபரமே

என்னும் தாயுமானுர் திருவாக்கு நினைவுக்கு வருகிறது.

மதுரையில் பாணபத்திரர் என்பவர் சிவபெருமான் முன் யாழ் வர்சிக்கும் கடப்பாட்டில் ஈடுபட்டிருந்தார். அவர் நாளுக்கு நாள் வறுமையில் வாடினர். இதல்ை சொக்க லிங்கப் பெருமான் மனம் இரக்கம்கொண்டு இவரது வறுமை தீரப் பொருள் தரும்படி சேரமன்னராம் சேரமான் பெருமாள் நாயனுர்க்கு ஒரு கடிதம் எழுதிப் பாணபத்திரரிடமே கொடுத்துச் சேர மன்னரிடம் கொடுக்கச் செய்தார். அக் கடிதம் கண்ட கழறிற்றறிவார் (சேரமான் பெருமாள் நாயனரின் மற்ருெரு பெயர்) பாண பத்திரருக்குப் பொன் தந் தனுப்பினர். இறைவர் எழுதித் தந்த பாடல்,

மதிமலி பரிசை மாடக கூடல் பதிமிசை நிலவும் பால்திற வரிச்சிறகு அன்னம் ப்யில்பொழில் ஆல வாயின் மன்னிய சிவன் யான் மொழிதரும் மாற்றம்