பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 含巫

பருவக் கொண்மூப் படிஎனப் பாவலர்க்கு உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்கும் சேரலன் காண்க பண்பால் யாழ்வல பாண பத்திரன் தன் போல் என்பால் என்பன் தன்பால் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே என்பது.

இந்த வரலாறே, பாணனுக்கே கனகம் கொடுக்கத் திருமுகம் சோற்களித்தோய்” என்னும் தொடரில் அமைந் துளது. மேலும் இதன் விரிவைக் காண விழைவோர் திரு விளையாடற் புராணத்தில் திருமுகம் கொடுத்த படலத்தில் காணவும். (54)

மருப்பா வனத்துற்ற மாணிக்கு மன்னன் மனம்அறிந்தோர் திருப்பா சுரம்செய்து பொன்கிழி சுந்ததின்,சீர்தினந்தே விருப்பா நினையடுத் தேன்.எனக் கீந்திட வேஇன்றென்ன கருப்பாநீன் சித்தம் திருப்பாய்என் மீது கறைக்கண்டனே.

(பொ. - ரை.) விடம் பொருந்திய கழுத்தை யுடைய வனே! மணம் பரவியுள்ள கடம்ப வனத்தில்வந்து சேர்ந்த பிராமணனுக்கு அருள் செய்யப் பாண்டிய மன்னன் மனத்தில் இருந்த உண்மைக் கருத்தை உணர்ந்து ஒரு திருப்பாடலை எழுதி அவனிடமே கொடுத்தனுப்பிப் பொன் முடிப்பைப் பெறும்படி செய்த உன் சீரிய அருள்குணத்தை எண்ணி மகிழ்ச்சியுடன் உன்னே,அடைந்தேன். இப்போது எனக்கு அவ்வாறு திருவருள் புரிய உனக்கேன்ன பஞ்சமா? இன்று நீ உன் மனத்தை என்பக்கம் திருவருள் புரியத் திருப்புவாயாக’. (எ . து.)

5