பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 திருவருட்பா

(அ - சொ.) கறை - விஷம். மரு - வாசனை. பா . பரவும். வனம் - கடம்பக்காடு. (மதுரை) மாணி - தருமி என்னும் பிராம்மணன். மன்னன் - வாங்கிய சூடாமணிப் பாண்டியன். (இவனுக்குச் சண்பக மாறன் என்னும் பெயரும் உண்டு) திருப்பாசுரம் - சிறந்த அழகிய பாடல். பொன் கிழி - பொன் முடிப்பு. கருப்பா - பஞ்சமா.

(வி - ரை.) சண்மக மாறனும் அவன் மனைவியும் அரண் மனையின் மேல் மாடத்தில் தனித்தனியே அமர்ந்திருந்தனர். அப்போது வேனிற் காலம் ஆதலின், தன் மனேவியின் கூந்தலி லிருந்து மணம் வீசுவதை உணர்ந்தர்ன். அம்மணம் புதிய 1fd6ARGT í DfI S5 இருந்தமையில்ை. அது தன் மனே வி கூந்தலின் இயற்கை மணம் என்று தீர்மானித்து அதனை எவர்க்கும் கூருமல், என் மனத்தில் உள்ள முடிவை எவர் கூறுகிருர் களோ அவர் இப்பொன் முடிப்பைப் பெறலாம்' என்று ஆயிரம் பொற் காசுகள் அடங்கிய ஒரு பையை மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மண்டபத்தில் கட்டித் தொங்கவிடச் செய்தான். அதைப் பெறுதற்குப் பல புலவர்கள் பல பாடல்களைச் செய்து மன்னனுக்குக் காட்டினர். அவற்றுள் ஒன்றேனும் அவன் உள்ளக் கருத்தை உணர்த்துவதாக அமையவில்லை

இந்த நிலயில் தருமி என்னும் பிராம்பணன் மதுரை சொக்கலிங்கப் பெருமானிடம் சென்று இறைவ நான் அனுதை. எனக்கு மணம் செய்துகொள்ள விருப்பம். ஆகவே, பாண்டியன் மனம் மகிழும் முறையில் ஒரு பாடலைப் பாடித் தருக" என்று கூற, இறைவர் அவ்வாறே,

' கொங்குதேர் வாழ்க்கை அம்சிறை தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல் செறிஎயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே '