பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 67

என்னும் பாடலைப்பாடிப் பாண்டியன் மனம் மகிழும்படி செய்து பொற்கிழியைத் தருமி பெறத் திருவருள் புரிந்தார். இதனை வியந்து அப்பர்பெருமானும் தன் பாட்டுப் புலவளுய்ச் சங்கம் ஏறி நற்கனகக்கிழி தருமிக்கு அருளினேன் காண்” என்று பாராட்டிப் பேசியுள்ளார். இந்த வரலாறே மாணிக்கு மன்னன் மனம் அறிந்தோர் திருப்பாசுரம் செய்து பொற்கிழி ஈந்த நின்சீர்' என்னும் வரிகளில் உளது. இதன் வரலாற்றை மேலும் அறிய அவாவுவோர் திருவிகளயாடல் புராணத்துள் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில் காண்பார்களாக,

பிழையை மேவும்.இவ் வாழ்க்கையி லேமனம் பேதுற்றஇவ் ஏழையை நீ விட லமோ அடிமைக் கிரங்குகண்டாய் - மாழையைப் போல்முன்னர்த் தாம்கொண்டு வைத்து வளர்த்தஇள வாழையைத் தம்பின்னர் நீர்விடல் இன்றி மறுப்பதுண்டே. (பொ ரை.) உலக மக்கள், முன்பு பொன்போலத் தாம் கொண்டுவந்த ஒரு வாழைக் கன்றைப் போற்றி வளர்த்துப் பிறகு அதற்கு நீர் விடுதல் இல்லாமல், அதனை வேண்டா என்று வெறுப்பரோ? ஒருபோதும் வெறுக்க் மாட் டார்கள். போற்றியே அவ் வாழை மரத்தை வளர்ப்பர். அதுபோலத் துன்பத்தையே பொருந்தப் பெற்ற இந்த உலக வாழ்க்கையில் அறிவு கலங்கி வாடிய உள்ளம் பெற்ற இந்த ஏழையை நீ கைவிடலாமா? ஆகவே, இந்த அடிமையி னிடத்து இரக்கம் காட்டுக எம்பெருமானே! ’ (எ . து.)

(அ.சொ.). மாழை . பொன். பீழை - துன்பம். பேதுற்ற - அறிவு கலங்கிய, இரங்கு - இரக்கம் காட்டுக.

(இ - கு.) கண்டாய் - முன்னிலை அசைச் சொல். (வி . ரை.) இன்னதம்ம இவ்வுலகம் இனிய காண் கிலர் இயல்புணர்ந்தோரே' எனும் புறநாநூற்று வரிகளும் *தாம் வளர்த்ததோர் நச்சு மாமரம் ஆயினும் கொலாச்