பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 திருவருட்பா

நானும் அங்ங்ணே உடைய நாதனே' என்னும் திருவாசக வரிகளும், முறையே பீழையை மேவும் இவ் வாழ்க்கை” வைத்து வளர்த்த இளவாழையைத் தாம் பின்னர் நீர் விடல். இன்றி மறுப்பதுண்டோ” என்னும் வள்ளலார் வாக்கைப் படிக்கும்போது நம் நினைவுக்கு வருகின்றன. (56)

கருத்தறி யாச்சிறி யேன்படும் துன்பக் கலக்கம்எல்லாம் உருத்தறி யாமை பொறுத்தருள் ஈபவர் உன்னஅன்றித் திருத்தறி யார்பிறர் அன்றேமென் கன்றின் சிறுமைஒன்றும் எருத்தறி யாதுநல் சேத அறியும் இரங்குகவே.

(பொ ரை.) உண்மைப் பொருளை அறியாத சிறியவ: கிைய நான் படும் துன்பத்தால் ஏற்படும் கலக்கங்களைக் கடுங் கோபம் கொள்ளுதல், அறியாமை உறுதல் ஆகிய இவற்றை எல்லாம் பொறுத்து எனக்குத் திரு அருள் செய்பவர் உன்னைத் தவிர்த்து யார் உளர்? பிறர் என்னைத் திருத்தி நல்வழிப்படுத்த அறியார். இளங்கன்றின் வருத்தத்தை எருது உணராது. நல்ல பசுவன்ருே கன்றின் துயரை அறியும்? ஆகவே என் மீது இரக்கம் காட்டுக பெருமானே!" (எ . து.)

(அ - சோ.) கருத்து - நல்ல பொருள். உருத்து - கடுங் கோபம். திருத்து - திருத்தம். சிறுமை - வருத்தம், எருத்து - எருது. சேதா - நல்ல பசு, செம்மையான பசு,

(இ - கு.) உருத்துதல், திருத்துதல் எனப்படுபவை, உருத்து, திருத்து என நிற்றல் முதல் நிலைத் தொழிற் பெயர் ஆதல் பற்றி என்க. எருது என்பது எருத்து என ஆயது விரித்தல் விகாரம் பற்றி ஆம். செம்மை !-ஆ=சேதா.

(வி . ரை.) ஈண்டுப் பிற தெய்வங்களே எருதாகவும், சிவபெருமானப் பசுவாகவும், தம்மைக் கன்ருகவும் கொண்டு பாடியுள்ள நயததைக் காணவும். (57)